பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399 திருக்கும், இத்தலத்தினைப் பார்க்கும் போது தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கச் சமயமும் கலையும் தான் உதவும் என்ற எண்ணம் வலுப்பெறும். எல்லா மதத் தினரும் இணைந்து அங்கு பிரார்த்தனை செய்கிறார்களே. ஒன்று சொல்ல மறந்து விட்டேன் கான்னாட் பிளே சுக்குத் தென்புறம் தான் ஜந்தர்மந்தர் என்ற விஞ்ஞானக் கூடம் இருக்கிறது. இதைத்தான் ஜெய்ப்பூர் மகாராஜா ஜெய்சிங் என்பவர் 1710-ல் கட்டினார் என்பர். முன்னரே தெரிந்திருக்கின்றோம், வானசாஸ்திர விற்பன்னரான ஜெய்சிங் மகாராஜா ஜெய்ப்பூரிலும் உஜ்ஜயினிலும் காசி யிலும், மதுராவிலும் இத்தகைய விஞ்ஞானக் கூடங்களைக் கட்டினார் என்பதாக இங்கு பற்பல யந்திரங்கள், எல்லாம் செங்கல்லால் கட்டப்பட்டவை சாம்ராட் யந்திரம், ஜெய் பிரகாஷ், ராம் யந்திரம், மிர்ஸா யந்திரம், நியாத் சக்கா, முதலியவை எல்லாம் கண்டு வான சாஸ்திர நிபுணர்கள் வியந்து நிற்க வேண்டும், காலத்தை அளந்து காட்டும் கருவி கள் அவை என்பதற்கு மேல் சாதாரண அறிவுபடைத்த நமக்கு என்ன தெரியும். இதற்கும் பக்கத்திலே தான் அகில இந்திய வானொலி நிலையம் இருக்கிறது. அந்த நிலையத் தின் முகப்பில் சலவைக்கல் வடிவில் மீரா தம்புரா ஏந்திப் பாடிக் கொண்டிருப்பாள். இங்கிருந்து ஒரு மைல் தூரம் கிழக்கே நடந்தால் ராமர் கோயிலைக் காணலாம், என்றார் கள். அதன் படியே நடந்து சென்றேன். அங்கு நான் கண்டது ராமரை அல்ல. பிரம்மாண்டமான வடிவில் ஒர் அனுமார் கோயிலைத்தான் அக்கோயிலின் கோபுரத்திலே ஒரு சிறு மாடக் குழியில் இரண்டு சின்னஞ்சிறு பொம்மைகள். அவை களே ராமர் சீதை என்கின்றனர். காவிரிக் கரையிலுள்ள கோயில்களில் சர்வாங்க சுந்தரனான ராமனைக் கண்ட கண்களுக்கு என்ன ஏமாற்றம் இந்த ராமன்வடிவிலே! இவ்வளவுதான் புதுடில்லியில் பார்க்க வேண்டியது, என்று நான் சொன்னால் என் பேரன் கேட்கிறான், என்ன தாத்தா டில்லி என்ற உடனேயே பள்ளிப் பிள்ளைகளாகிய