பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. சண்டிகளில் சண்டி "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பது ஒரு இலக்கணச் சூத்திரம். இலக் கியம், கலை என்பதில் எல்லாம் ஒரு மரபு உண்டு. அம்மர புக்கு விரோதமாக எழுதுவதோ பேசுவதோ, சித்திரிப்பதோ எல்லாம் மக்களால் போற்றப்படமாட்டாது என்றாலும், இந்த மரபையும் மீறி காலத்திற்கு ஏற்ற வகையில் இலக்கியச் சொற்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மக்கள் நாளில் நின்று நடமாடும் சொற்களை வைத்தே சிறந்த இலக்கியங்களைப் படைக்க முடியும் என்று அமரகவி பாரதி காட்டிவிடவில்லையா? அதே போலக் கட்டிடக் கலை யிலும் தமிழகத்தில் பல்லவர்பாணி, சோழர்பாணி, நாயக்கர் பாணி என்று பலதரப்பட்ட பா னி க ள் இருப்பது தெரியும், அடிப்படை மரபுக்கு முரண் இல்லாத வகையில் காலத்துக்கு ஏற்ற முறையில் பாணிகளை உருவாக்கும் திறம் மக்களிடையே, கலைஞர்களிடையே என்றுமே இருந்து வந்திருக்கின்றது. இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி சுதந்திர யுகமாக இருக்கிறது. பல வருஷங்களாக ஆங்கில ஆட்சியின் கீழ் அடிமை நாடாக இருந்த நமது பாரதம், சுதந்திரம் பெற்றது. இன்னும் ஆசிய ஆப்பிரிக்கா நாடுகள் பல தங்கள் தங்கள் அடிமைத் தளைகளை உதறிவிட்டு சுதந்திர நாடாக இயங்கத் துவங்கியிருக்கிறது. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு" என்ற முழக்கமே எங்கும் கேட்கிறது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், தனி மனிதனின் சுதந்திரம் என்றெல்லாம் சுதந்திர உணர்ச்சி யோடு மக்கள் வாழ்கின்றனர். கலை உலகில் இந்த சுதந்திர மறுமலர்ச்சியைப் பார்க்கின்றோம். கட்டிடக்