பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.09 குருகேrத்திரம் செல்ல டில்லியிலிருந்து அம்பாலா நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறவேண்டும். டில்லியிலிருந்து கிட்டத்தட்ட நூறு மைல் சென்றதும் குருக்ஷேத்திரம் ஜங்ஷன் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். காரிலேயே செல்வதானால் டில்லியிலிருந்து வடமேற்காக நூறு மைல் செல்லவேண்டும். வடநாட்டில் உள்ள ரோடுகளில் செல்ல அகலமாகவும் நன்றாகவும் போடப்பட்டிருக்கும்ரோடு இது ஒன்றுதான். போகிற வழியிலே பானிபட் என்று ஒரு இடம் வரும். இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே இங்கு நடந்த போர்களைப்பற்றி நாம் பள்ளியில் படித்த சரித்திரம் எல் லாம் ஞாபகத்திற்கு வரும். அப்படிப் போர்ச் சிந்தனைகளி லேயே மனதைச் சுழலவிட்டுக்கொண்டு மேலும் சென்றால் உலகப்போர்களில் எல்லாம் பெரிய பாரதப்போர் நடந்த குருக்ஷேத்திரப்போர்களத்திற்கே வந்து விடுவோம், பாண்டவர்கள் காலத்தில் குருக்ஷேத்திரம் எப்படி இருந்ததோ? ஆனால் இ ன் று பொலிவு இழந்து ஒரே பொட்டலாகத்தான் இருக்கிறது. அக்காலத்தில் இருநூறு சதுரமைல் விஸ்தீரணமுள்ளதாய் சரஸ்வதி நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் பல பல ஊர்களும், ஊர்களில் கோயில்களும் நிறைந்ததாய் இருந்தது என்று வாமன புராணம் கூறுகிறது. ஆதியில் இந்தப் பிரதேசத்தை உத்தரவேதி என்றே அழைத்திருக்கின்றனர். அதன் பின் குருமகாரர்ஜன் இந்த இடத்தில் தனது சாம் ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறான். இந்த பிரதே சத்தை ஒரு சிறந்த இறையருள் நிறைந்த கேந்திர மாக அமைக்க முயன்றிருக்கிறான். அதற்காக சிவனது ஊர்தியான நந்தியையும் யமனது வாகனமாகிய எருமைக் கடாவையுமே இரவலாக வாங்கி அவைகளை ஏரில் பூட்டி அங்குள்ள நிலத்தை உழுது பண்படுத்த முனைந்திருக் கிறான். அங்கு அவனைச் சந்தித்த விஷ்ணு, இங்கு எதையப்பா விதைக்கப்போகிறாய்?" என்று கேட்டதற்கு, சத்தியம், தருமம், தவம், அன்பு, யோகம், முதலிய 露?38一露台