பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 இந்த அமரநாதரை தரிசிக்க இந்துக்கள் மட்டும்தான் வருகிறார்கள். என்றில்லை. புத்தர்கள் வருகிறார்கள். முஸ்லீம்கள் வருகிறார்கள். அறுநூறு ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரை ஆண்ட ஜைன உலாப்தீன் என்லும் மகம்மதிய அரசன் அக்குகைக்கு வந்த அமரநாதரை தரிசினம் செய்து திரும்பியிருக்கிறான் என்பது வரலாறு. உண்மைதான், தென்னடுடைய சிவன் இந்த அமரநாதத்திலே எந்நாட்ட வர்க்கும், இறைவனாக அல்லவா விளங்குகிறான். அத். தகைய அருள்கோலத்தை சுயம்புலிங்க வடிவினிலே காணும். பேறு என்ன எளிதானதா, நேரிலே சென்று காண வாய்ப் பில்லாதவர்கள் எல்லாம் 428-ஆம் பக்கத்தில் உள்ள படத். தில் காணும் திருவுருவையாவது கண்டு மகிழட்டும். ஆம், அமரநாத்கீ ஜெய்!” என்று இங்கிருந்தே எழுப்பும் குரல். அவன் காதுகளுக்கு எட்டாது போய்விடுமா என்ன?,