பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 யாகக் கிடக்கும் சிவன் பேரிலேயே நின்று ஆடிக் கொண் டிருக்கிறாள் அவள் என்பர். சண்டிகரில் உள்ள சண்டியும், கால்காவில் உள்ள காளியும் அழகானவர்கள் இல்லை. ஆதலால் என் யாத்திரையில், சிறந்த மலைவாசஸ்தலமான சிம்லா சென்றதும் அங்குள்ள சியாமளாவின் கோயிலுக்குச் சென்றேன். சியாமளா என்றால் கருத்த நிறமுடைய காளி என்று தானே பொருள் : இன்னும் சொல்லப் போனால் சியாமளா என்ற பெயர் தானே சிதைந்து சிம்லா என்று பெயர் பெற்றிருக்கிறது. அந்தச் சியாமளா தேவியோ ஒர் அடி உயரமே உள்ள ஒரு சிறிய வடிவினள். கேலிக்கூத்தான வடிவம் என்று கூட சொல்லத் தோன்று கிறது. அந்த வடிவினைப் பார்த்து. அன்னை வடிவமடா அவள் ஆதிபராசக்தி தேவியடா என்று பாரதியாரோடு சேர்ந்து நம்மால் உற்சாகமாக பாடமுடியாது. என்றாலும் இமயதின் சிகரத்திலே சிறந்ததொரு நகரான சிம்லாவில் இருக்கும் சியாமளியைப் பார்க்காவிட்டால் நமது யாத்திரை பூரணம் அடைந்ததாக ஆகாதே! ஆதலால் இன்று உங்களை எல்லாம் அந்த மலை வாசஸ்தலமாகிய சிம்லாவிற்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். என்ன வருகிறீர்களா? சிம்லா செல்வதற்கு வழி முதலில் டில்லியிலிருந்து ரயிலில் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்கு டில்லியில் ரயில் ஏறினால் காலை 6 மணிக்கு கால்கா ஸ்டேஷன் வந்து சேருவோம். அதன் பின் ஒரு பிரச்சினை. மேலே செல்ல வேண்டிய பயணத்தை ரயிலிலேயே தொடர்வதா இல்லை, டாக்சியை வைத்துக் கொண்டு ரோடு வழியே செல்வதா என்று. கிட்டத்தட்ட அறுபது மைல் ரோட்டில் செல்லவேண்டும். வழியோ வளைந்து வளைந்து மலைமீது ஏறிக்கொண்டிருக்கும். அத்தகைய பயணத்தில் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்க வரும். இதற்கெல்லாம் தயார் என்பவர்கள் டாக்சியில் ரோடு வழியே செல்லலாம். சுமார் பத்து பதினோரு மணிக்கு எல்லாம் சிம்லா சென்று