பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 என்று ஒரு சிறிய கோயிலைக் கட்டியிருக்கின்றனர். இங்கு, கட்டிடம் எல்லாம் சலவைக்கல்லில்தான். எப்போதும் பஜ. னையும் பூசையும் நடக்கும். இங்கு செல்வோர் தொகையே அதிகம். சொல்லப் போனால் சியாமளியைத் தேடிப்போ வோர்களே கிடையாதுதான். - இவ்வளவுதான் சிம்லாவில் பார்க்க வேண்டியது. ஊர் திரும்ப வேண்டியதுதானா என்று தானே கேட்கின்றீர்கள், இல்லை இன்னும் ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். இது ஜக்கோ மலை என்னும் பகுதியில் இருக்கிறது. சிம்லாவை விட ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. சுமார் ஒன்றரை மைல் ஏறிச்செல்ல வேண்டும். பாதையும் அவ்வளவு நன்றாய் இராது. கொஞ்சம் சிரமப் பட்டுத்தான் ஏறவேண்டும். அங்கு ஒரு பெரிய கோயில் ராமருக்கு. அக்கோயிலில் பிரதான தெய்வமாக விளங்கு கிறவர் ஆஞ்சநேயர்தான். அதற்கு ஏற்றாற்போல் அங்கு நமது கிஷ்கிந்தா வாசிகள் ஆதிக்கம்தான் கோயிலைச் சுற்றி எண்ணிறந்த குரங்குகள். ஆதலால் போகும் போதே கொஞ்சம் கடலை, பழம் எல்லாம் வாங்கிச் செல்ல வேண்டும். கோயிலுள் நுழைந்து அங்குள்ள ஆஞ்ச நேயரையும் அவர் நிழலில் வதியும் ராமரையும் வணங்கித் திரும்பலாம். மலை ஏறிய சிரமத்திற்கு ராம தரிசனம் கிடைக்கிறதே அது போதாதா? s சிம்லா உல்லாசமாய்ப் பொழுதுபோக்க ஒரு சிறந்த, இடம். அதுவும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அங்கு பணி மழை பெய்யும். சிகரங்கள் எல்லாம் உருக்கிய வெள்ளியால் மூடப்பெற்றிருக்கும். ஏன் வீட்டுக்கூரைகள், மரங்கள் எல்லாம் பணியால் மூடப்பெற்றிருக்கும். பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கும் வழியாக நடந்து செல்வதே மிக்க மகிழ்ச்சி தரும். ஆஸ்த்மா முதலிய நோயுள்ளவர்கள் அந்தத் திசை நோக்கியே தலைவைத்தல் கூடாது. உடலில் வலிவும், உள்ளத்தில் தெம்பும் எல்லாவற்றிற்கும் மேலாக பையில் நிறையபணமும் உள்ளவர்கள் சென்று காண வேண்டிய இடம் அது. உங்களுக்கு இவை யெல்லாம் இருக்கிறது. சரிதானே.