பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பேலூர் சென்னக் கேகவர் திமிழ் நாட்டில் சமயகுரவர்களில் ஒருவரான ஞான சம்பந்தர் கதை பிரசித்தமானது. அதிலும் அவர் மதுரை சென்று சமணர்களை வென்று சமணமதத்தில் இருந்த பாண்டிய மன்னனை சைவனாக்கியதை நன்கு அறிந்திருக் கிறோம். கதை இதுதான். பாண்டிய மன்னனான மாற வர்மன் சமணனாக இருக்கிறான். அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பதொப்ப, குடிமக்களும் சமணமதத்தையே தழுவி நிற்கின்றனர். அதனால் ஆவலாய் அரண் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் குறைகின்றன. சைவம் தலை துரக்காது தாழ்ந்து கிடக்கிறது. எனினும் மன்னன் மனைவியரும் பாண்டி மாதேவி மங்கையர்க்கரசியும், மந்திரி குலச்சிறையாரும் சிவனடி மறவாச் சிந்தையராக வாழ்கின்றனர். அவர்கள் வேண்டிக்கொண்டபடியே, ஞானசம்பந்தரும் பாண்டி நாட்டுக்கு வருகிறார், ஞான சம்பந்தரின் வரவை அறிந்த சமணர்கள் அவர் இருந்த மடத்திற்கே தீவைக்கின்றனர். அப்படி அவர்கள் வைத்த தீயை பையவே சென்று பாண்டியர்க்காகுக' என்று பணிக் கின்றார் சம்பந்தர். பாண்டிய மன்னன் வெப்பு நோயால் வாடுகின்றான். அவன் நோய் தீர்க்க சமணர்கள் விரை கின்றனர். அவர்களது மருத்துவத்தால் மன்னனது வெப்பு நோய் நீங்கவில்லை. மங்கையர்க்கரசியின் அழைப்பின் பேரில்-ஞான சம்பந்தர் வருகிறார். மந்திரமாவது நீறு’’ என்று பாடி மன்னன் உடம்பில் திருநீறு பூசுகிறார். மன்னனது நோய் நீங்குகிறது. அதன்பின் நடந்த அனல் வாதம், புனல் வாதங்களிலும் சம்பந்தரே வெல்கிறார். மன்னனும் சமணமதத்தை உதறிவிட்டு சைவனாகிறான். இவ்வரலாற்றைச் சேக்கிழார், அவர் இயற்றிய திருத் தொண்டர் புராணத்தில் விரிவாக உரைக்கிறார். இதே