பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சுவரெல்லாம் ஒரே சிற்ப வ டி வ ங் கள் மயம் தான். அச்சுவரில் ஏழு எட் வரிசை வரிசையாக சிற்பவடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அடியில் உள்ள வரிசையில் யானைகள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஒடிக்கொண்டிருக்கும். இன்னும் சில கொடி களும், நடனப் பெண்களும் சிறிய அளவிலும் பெரிய அள விலும் சுவர் முழுவதும் நிறைந்திருக்கும். இன்னும் இந்தச் சுவர்களிலேயே ஹரிஹரன், சிவனது மூர்த்தங்கள் பரசுராமன், வாமனன், வாசுகி, சூரிய நாராயணன், மஹிஷமர்த்தனி, அர்ச்சுனன், முதலிய வடிவங்கள் நிறைந் திருக்கும். இங்கிருப்பவைகளில் சிறப்பாயிருப்பவை எல்லாம் பெண்மையின் வடிவங்களே. கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் இருக்கின்றனர். இவர்களில் சிலரே தெய்வ அம்சம் பெற்றவர்கள் மற்றவர்கள் எல்லாம் சாதாரணப் பெண்களே, என்றாலும் எல்லோரும் அழகிய பெண்களே. பொட்டிடும் நங்கை, கிளி ஏந்திய பெண். ஆடையில் தேள் ஒன்றிருக்கிறது, என்று தெரிந்ததும் ஆடையை உதறிவிடும் மங்கை, காதலனை எதிர்நோக்கி நிற்கும் காதலி என்ற வகையில் எண்ணிறந்த பெண்கள் ஒவியங்களாக இருக்கின்றனர். எல்லாம் நல்ல நடனக் கோலத்தில், இச்சிற்ப வடிவங்களில் உள்ள நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் பார்த்து. இப்படியெல்லாமா கல்லில் செய்ய முடிந்திருக்கிறது ஏதோ, மெழுகில் செய்து அதை அமைத்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். நிரம்பச் சொல்வானேன், ஒவ்வொரு வடிவமும் ஒரு கவிதைதான். ரசிகமணி டி. கே. சி அவர்கள் சொல்வார் களே, கவிதைக்கு விஷயம் முக்கியமல்ல வடிவம் (Form) தான் முக்கியம் என்று அந்த வடிவத்தையே அல்லவா அற்புதமாக வடித்திருக்கிறார்கள் சிற்பிகள். இந்தச் சுவரில் உள்ள வடிவங்களைப் பார்த்துக்கொண்டே இருந் தால், கோயிலைச் சுற்றி சுற்றி வரச் சொல்லுமே தவிர உள்ளே செல்லவோ அல்லது வெளியே வரவோ தோன்றாது. அப்படியே இருந்து விடமுடியுமா நம்மால்.