பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேங்கடம் முதல் குமரிவரை

எழுத்துக்களுடன் கூடிய பிரனவம் போலவும் அமைத்துக் கட்ட முடிக்கிறார்கள்.

கோயிலின் அடித்தளத்தில்தான் பெருமாளின் சயனத் திருக்கோலம். உரகமெல்லணையான் என்ற பெயரோடு அறிதுயிலில்

ராமானுஜர் உபதேசம்

அமர்ந்திருக்கிறான். இவனையும் முந்திக் கொண்டு ஒரு சிறு கோயிலில் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். இவரை வலம் வந்தே நாம் கோயிலில் பிரதான மண்டபத்தில் நுழைகிறோம். அங்கு நம் கண்முன் நிற்பவர் நர்த்தன கிருஷ்ணன். காளிங்க நர்த்தனனாக நிற்கிறார். இனிகோயிலின் முதல் தளத்தில் ஏறி அங்கு துயில் கொள்ளும் உரகமெல் லணை யானைக் காணலாம். இப்பளளி கொன் டானின் தலை மாட்டிலே தான் கதம்ப மகரிஷி தவக்கோலத்தில் இருக்கிறார். மேலும் படியேறி இரண்டாவது தளம் சென்றால் அங்கே நின்ற கோலத்தில் சௌமிய நாராயணன் இருக்கிறார். அதற்கும் அடுத்த மூன்றாவது தளத்தில்தான் இருந்த கோலத்தில் ஸ்திதநாராயன வைகுண்ட நாதன் கோயில் கொண்டிருக்கிறான், எல்லோரும் சுதையாலான வடிவங்களே.