பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

191


 
தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கைக் குரல் முழக்கப்பட வேண்டும்!


ந்தியாவில் உள்ள தேசிய இன மக்கள் உரிமை எழுச்சிக்காகப் போரிட வேண்டிய காலகட்டம் இது. தில்லியின் வல்லாட்சியானது, இன்றைய நிலையில் அனைத்துத் தேசிய இனங்களின் தனிவளர்ச்சியை ஏதாமொரு வகையில் ஒடுக்கிக் கொண்டே வருகிறது. அசாமியரின் இன எழுச்சிப் போராட்டத்தையும், பஞ்சாபியரின் தன்னதிகாரக் கோரிக்கை எழுச்சியையும் தன் வல்லதிகாரக் கொடுங்கைகளால் கடுமையான அடக்கு முறைகளின் வழி, அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது தில்லி, தேசியம், ஒருமைப்பாடு என்னும் முதலாளியக் கோட்பாடுகளின் அடிப்படையில், மாநிலங்களின் நயன்மையான இன நலக் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதும், இழிவுபடுத்துவதும், படைத் துறைகளையும் காவல்துறையையும் கொண்டு வன்முறைகளை ஏவிவிடுவதும் தில்லியின் வழக்கங்களாகி விட்டன. பொதுவாகவே, இந்தியா தன்னுரிமை பெற்ற நாளிலிருந்து, அதன் ஓரினக் கருத்துக் கோட்பாடு, ஆரியத்தின் சார்பாகவும், அவ்வினத்தின் சாதிய, மதவியற் கொள்கைகளை நிலைநிறுத்தும் முயற்சியாகவுமே, இருந்து வருகிறது.

தென்னாட்டுத் திரவிட இனங்களுக்கிடையில், இதுபற்றிய ஒரு முணுமுணுப்பு இடை நாளிலிருந்தே இருந்து வந்தாலும், போதிய இனநலக் கருத்தெழுச்சிக்குரிய சரியான வடிவம் கிடைக்காமல், தேசியப் போர்வையில், அவை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால் தில்லியின் கரவான போக்கை, இக்கால் தென்மாநிலங்கள்