பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

209

என்றும், மற்றும், இங்குள்ள மொழியடிமைத்தனம், சாதிக் கொடுமை, சீரழிந்து வரும் மக்கள் நலம், பண்பாட்டுச் சீரழிவுகள் – முதலியவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி அவை எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அறிக்கை விரிவாகவும் விளக்கமாகவும் விளத்தப்படுத்துகிறது.

இன்றுள்ள தமிழக அரசு, எத்துறையிலும், தற்சார்பின்றித் தில்லியிலுள்ள நடுவண் அரசிற்கும் அதன்வழி பல்வேறு வல்லரசு நாடுகளுக்கும், தலைகுனிந்து, எடுபிடி அரசாகவே செயல்பட்டு வருவதையும்; இங்குள்ள அரசியல் கட்சிகளும், தங்களுக்கென்று தாங்கள் தொடக்கத்தில் அறிவித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்முறைகளையும், அவற்றுக்கான நயன்மையான மக்கள் போராட்டங்களையும் வழிநடத்த முடியாமல் மறந்தும், துறந்தும் பெருநலந் துய்க்கின்ற வாழ்க்கையிலேயே மிதந்து, இலக்கக் கணக்கில் செலவு செய்து, கோடிக் கணக்கில் பணம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய ஆளும் கும்பலுக்கு ஏவலாட்களாக, நேரத்திற்கு ஒரு கட்சி, நிமையத்திற்கு ஒரு கொள்கை என்று பச்சோந்தித்தனமாகச் செயல்பட்டு வருவதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இறுதியில், முற்ற முடிந்த முடிபாக, மேற்குறிப்பிட்ட இழிநிலைகளையெல்லாம் ஒழித்துத் தமிழக மக்களுக்கு உண்மையான – வளமான வாழ்வை உறுதிப்படுத்திட வேண்டுமெனில், அனைத்து வல்லரசு நாடுகளின் வல்லாளுமைகளை எதிர்ப்பதும், பன்னாட்டு மூலமுதலீடுகளையும், இந்தியப் பெரு முதலாளிகளின் மற்றும் தமிழகத் தரகு முதலாளிகளின் மூலமுதலீடுகளையும் பறிமுதல் செய்து, உழைக்கும் மக்களின் உடைமையாக்குதல் வேண்டும் என்பதையும், பெரும் நிலக்கிழார்களின், கோயில் மடங்களின் நிலங்கள், உடைமைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, கடைநிலைக் குத்தகைக்காரர்களுக்கும், கூலி உழவர்களுக்கும் உடைமையாக்கிடல் வேண்டும் என்பதையும், மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான மக்கள் சமநிலைக் குடியாட்சியை அமைத்துத் தருவதன் மூலம் மட்டுமே இவை அனைத்தையும் செய்திட இயலும் என்பதையும், இன்றைய அரசியல் சிறைக்கூடத்தில் அல்லலுற்றுக் கிடக்கும் நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த அடிப்படையான பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதையும் தெளிவாக