பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேண்டும் விடுதலை




 
தமிழகப் பிரிவினை தேவையே!


ருவரோடொருவர் சேர்ந்து வாழ்வது எப்படி ஒரு மெய்ப்பொருளோ, அப்படியே பிரிந்து வாழ்வதும் ஒரு மெய்ப்பொருளே! சேர்ந்து வாழ்வதால் நன்மைகள் சில பெறுவதைப் போலவே, பிரிந்து வாழ்வதிலும் நன்மை யுண்டு. இவ்விடத்தில் 'சேர்ந்து' என்பதற்கு எப்படி 'வேற்றுமை யற்ற முறையில் இணைந்து' என்று பொருள் கொண்டுவிடக் கூடாதோ, அல்லது அவ்வாறு மட்டுந்தான் பொருள் படுத்திக் கொள்ளக் கூடாதோ, அப்படியே ‘பிரிந்து’ என்பதற்கும் 'பகைமையுற்ற நிலையில் வேறுபட்டு' என்று பொருள் கொண்டுவிடக் கூடாது; அல்லது அப்படி மட்டுந்தான் என்று பொருள்படாது. தனிமொழி, பண்பாடு, வரலாற்று அடிப்படை, குமுகாயப் பொருளியல் அரசியல் அடிப்படைகளே ஓர் இணைந்துள்ள நாட்டின் பகுதி மக்களைப் பிரிவினை எண்ணத்திற்குத் தூண்டுகின்றன. இணைந்து வாழ்வதற்கும் அவையே அடிப்படைகளாகின்றன. இவ்வடிப்படைகளால் இணைப்பு நிலைக்கு எப்படிச் சார்பு நிலைக் கரணியங்கள் காட்ட முடியுமோ அப்படியே அதே அடிப்படைகளைக் கொண்டு பிரிவு நிலைக்கும் சார்பு நிலைக் கரணியங்கள் காட்ட முடியும். இப்படிப்பட்ட நிலையில் பிரிவு வேண்டும் என்ற எண்ண. எழுச்சிக்குத்தான் அடிப்படைக்கான வேண்டுமேயன்றி, பிரிந்து போகக்கூடாது என்பதற்கான அடிப்படையை எவரும் ஆராய்தல் தேவையில்லாதது. மாந்தனின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பது வேறு, ஒரு நாட்டின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பது வேறு. இரு வேறுபட்ட அடிப்படை அமைப்புகள் அமைந்த இரு நாடுகளோ,