பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு திருமந்திர நகர் சைவசித்தாந்த சபையின் இருபத்தொன்பதாம் ஆண்டு நிறைவு மகோற்சவ மகா சபையினது அக்கிராசனாதிபதி யவர்களுடைய வரவு வாழ்த்து. சிவமிழைத்த நல்லணிபூண் செந்தமிழைக் கூடித் தவமிழைத்துப் பெற்றெடுத்துத்தந்த சிவமதத்தைப் பண்டுகற்று நின்ற அன்பர் பாடியபன் நூல்களின்று கண்டுகற்று நிற்குமன்பர் காள். 25 கடவுளரு ளாலாக்கிக் காத்துவரு கின்ற திடவுலக மெல்லாம் நாம் தேரின் - உடலின் மலிகின்ற பல்லுயிர்க்கும் மாதாவாய் நின்று பொலிகின்ற திக்கற் புவி. புவியிலுள நாடெல்லாம் புக்காயின் என்றும் குவிநிதிகள் பல்வகைய கொண்டு--கவினுறுநல் ஆவனமும் மாந்தர் அமைவுமுற்று நிற்பதுநம் நாவலமென் னும்பழைய நாடு. 15. நாவலான் நாட்டிகை நாடெல்லாம் நாடுங்கால் தேவலமும் சீர்கொணரும் தேர்வலமும் - பாவலமும் பெற்றறங்கள் செய்து பெரும்புகழும் நல்வாழ்வும் உற்றுயர்ந்த திப்பரதம் ஒன்று. சு பரதவருடத்திலுள பன்மொழியும் அண்ணில் பரமனருள் நல்குவன பண்டை--அரசர்கள் செப்பநின்ற ஆரியமும் செந்தமிழும் ஆமிவற்றிற் கொப்பதொன்றின் றென்பவறிந் தோர். 88