பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

நனியாம் புகழை நாட்டின ரன்றித்
திருவருட் பயனைச் சேரும் வழியை
யொருவருக் காயினு முன்போ லுரைத்ததா
இதுவரை யெவரு மியம்பக் கேட்டிலம்;
அதுவு மன்றி யன்னவ ரயலிடஞ்
சென்றுபந் நியாசஞ் செய்தது மிலையால்
துன்றுசீர்ப் பாண்டித் துரைப்பூ பதிநீ
தமிழும் வளர்த்துச் சைவமும் வளர்த்தே
யமிழ்தினு மினிதா வயலிடஞ் சென்று
பலர்க்கும் பயன்படப் பண்புட னளித்தும்
உலகினி லெவரினு முயர்நிலை யடைந்து
நிலமிசை புகழை நிறுவியும் வீட்டு
நிலமிசை புக்கு நீடித்து வாழப்
பலபடி சாதனம் பண்பினிங் கமைத்துத்
தலைவ னாகுந் தகுதியும் பெற்றாய்.
தொன்று தொட்டுத் தூய வழியில்
நின்று கருணை நிதிகொண் மாண்பா
லின்றி வ ணிறையா விசைந்து செய்தநின்
நன்றியை யெழுமையு நாமறக் கிலமே ;
அன்றியு நின்னற மவனியின் மீது
நின்று நிலவநீ நீடு வாழ்கச்
சிவனடி மலரைச் சிந்தையில் வைத்துத்
தவமும் புரிந்து தவமுறு வோமே.

24