பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமே புறம்.

லுரை, தொல்காப்பியம், நம்பியகப்பொருள் முதலாய சில நூல்கள் இருப்பினும், அவையெல்லாம் முதிர்ந்த ஆராய்ச்சியுடையவர்கட்கே பயன்படுவனவாம். மேனாட்டார் மனேதத்துவ சாஸ்திரம் ஆன்மதத்துவ சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்களை வரவர ஆராய்ச்சி செய்து விளக்கி வருதல் போல நம் நாட்டார் செய்வதுமில்லை, ஆகவே, சாதாரண ஜனங் களும், சிறுவர் சிறுமியர்களும் அத்தகைய தத்துவ விஷயங்களில் ஸ்தூல மான அறிவு கூடப் பெறுதற்கு முடியாதவர்களாய் இருக்கிறார்கள். பிள்ளையவர்கள் அக்குறையினை இந்நூலால் ஒருவாறு நிவர்த்தி செய்திருக்கிறார்கள் என்று கூறுவது புகழ்மொழி யாகாது. இப்புத்தகம் நம் நாட்டுச் சிறுவர் சிறமியர்களாலும் பெரியோர்களாலும் படிக்கப்பட வேண்டுவதான ஒரு சிறந்த புத்தகமாகும். இதில் சொல்லும் விஷயங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்து நம் ஒழுக்கத்தை நாம் சீர்திருத்திக்கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறோம்.”—வைசியமித்திரன், தேவகோட்டை.

இம்மொழிபெயர்ப்பு நூலை ஆக்கித்தந்த ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் ரஸம் பொழியும் சொற்களால் மனத்தின் மகிமையை விவரித்துள்ளார். ஹிந்துக்களின் கொள்கைப்படி மனமே எல்லாவற்றுக்கும் காரணமென்பதை ஆங்கில விவேகிகளும். ஆமோதிக்கிறார்களென்பதை இப்புஸ்தகத்தால் அறியலாம். ஸ்ரீமாந் சிதம்பரம் பிள்ளையவர்கள் ‘மனம்போல வாழ்வு’ என்ற அருமையான தமிழ் நூலை ஏற்கனவே வெளியிட்டு நமது தமிழ் நாட்டாருக்கு உபகாரம் செய்திருக்கிறார். காகிதமும், முகப்பத்திரமும், எழுத்துக்களும் வெகு நேர்த்தியாயுள்ளன.”—ஹிதகாரிணி, சென்னை.

“இப்புத்தகத்தில் அகமும் புறமும், மனத்தின் தன்மையும் வன்மையும், உயர்தர வாழ்வு—முதற்பாடம், உயர்தர வாழ்வு—இரண்டாம்பாடம், உயர்தரவாழ்வு—மூன்றாம்பாடம், மனோ நிலைமைகளும், அவற்றின் காரியங்களும் என்னும் அரிய விஷயங்கள் காணப்படுகின்றன. இது ஒவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய அவசியமான நூல். இப்புத்தசுத்தை ஒவ்வொரு தமிழரும் கைக்கொண்டு இதைப்போன்ற

79.