பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயப் பிரவேச உரிமை.

7

 

செய்வதும் அசட்டுத்தனமாகுமென்று பகுத்தறிவுக்குப் படுகிறது. இதுதான் சட்ட முறையுமாகும். ஏனெனில், பிற்காலத்து நடவடிக்கையைக் கொண்டு முற்காலத்திற் கொண்ட உத்தேசத்தை ருசுப்பிக்க முயல்வது சட்டப்படி அர்த்தமற்ற செயலாகும்.


ஆகவே, பழைய இந்துப் பொதுக்கோவிலைப் பொறுத்தனட்டில், அதன் ஸ்தாபனத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதிருக்கும் வரையிலும், 'ஆதிகாலப் பழக்க வழக்கம்' என்பதை சாட்சியமாக வைத்து நாம் எதையும் தெளிவுபடுத்த முடியாது என்று திட்டமாகச் சொல்லலாம்.

அப்படியானால், வக்கீல்களிடத்தும், வழக்கறிஞர்களிடத்தும் பண்டிதர்களிடத்தும், பெரியநீதிபதிகளிடத்துங்கூட 'பழக்க வழக்க'மென்னும் மூட நம்பிக்கையானது குடிகொண்டிருப்பானேன்? சட்டசம்பந்தமாகவும் சரித்திர வாயிலாகவும் முழு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்ய அவர்களுக்கு மனமில்லாதஅதினாலோ சக்தியில்லாததினாலோ, அறியாமையினாலோ அல்லது சாதி சமய உணர்ச்சியினாலேற்படும் மனப்பான்மையினாலோதான் இவ்வாறு ஏற்படுகின்றது.

பண்டைக்காலத்து இந்துப் பொதுக் கோவில் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு இந்தியனுக்கும், இல்லாவிட்டால் ஒவ்வொரு இந்துவுக்கும் - அவர் உயர்ந்த சாதியிற் சேர்ந்தவராயினுஞ் சரி, தீண்டத்தக்கவராயிருப்பினுஞ்சரி, தீண்டத் தகாதவராயிருப்பினுஞ் சரி - நுழைவதற்கும் வணங்குவதற்கும் உரிமையுண்டு என்பதை மிகப்பணிவுடனும், அதேபோன்ற தைரியத்துடனும் கூறுகின்றேன். இத்தகைய கொள்கைதான் சரித்திரபூர்வமாகவும், மதக்கோட்பாடுகளின்படியும் நியாயமானதாக இருக்கமுடியும். ஒரு முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவரோ, பௌத்தரோ, சமணரோ, எம்மதத்தவராயினும் சரி, எத்தேசத்தராயினும் சரி, அவர் விரும்பினால் எக்கோவிலுக்குள்ளும் பிரவேசிக்கவும், வணங்கவும் அதிகாரமுண்டு. இது சில வைதீகப் பிடுங்கல்களுக்கு அதி தீவிரமான கொள்கை-