இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவள்ளுவர் திருக்குறள்.
அறப்பால். அஃதாவது, அறத்தின் பகுதி. பாயிரம். பாயிரம்- முகவுரை முதல் அதிகாரம்-அறன் வலி யுறுத்தல்.
அஃதாவது, அறத்தினது வலிமையை வற்புறத்துதல்.
க. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ உயிர்க்கு.
பொருள். சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு, ஆக்கம் - வீட்டினைக் கொடுக்கும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தின் மேற்பட்ட நல்வினை, உயிர்க்கு காவன்---மனித உயிர்க்கு யாது.' (ஒன்றும் இல்லை.)
அகலம்.'ஒகாரம்' அசை. ஆக்கம்- செல்வம். அஃது ஈண்டு ஆகுபெயர், அதனைத் தரும் நல் வினைக்கு ஆயினமையால் , இன்பத்தையும் புகழையும் தரும் செல்வத்தையும் தழுவி நிற்ற லால், செல்வமும் என்பதன் உம்மை இருந்தது தழீஇய எச்சவும்மை, உம்மையைச் செல்வம் என்பதனோடு மாத்திரம் சேர்த்திருத்தலானும், ஈனும் என்னும் சொல்லைச் சிறப்பு என்பதனோடும் செல்வம் என்பதி னோடும் சேர்த்திருத்தலானும், மேற்கண்டவாறு பொருள் உரைத் தலே பொருத்தம். சிறப்பீனுஞ் செல்வமானது, ஞானம்.
கருத்து. 'இன்பமும் புகழும் தரும் செல்வத்தோடு வீட்டைத் தரும் செல்வத்தையும் அறம் கொடுக்கும்.
117
117