பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். கருத்து. கனவினால் வரும் செல்வம் வர்வது போலத் தோன்றுமே யன்றி உண்மையில் கெடும். ச. *களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமந் தரும். 143. பொருள். களவின்கண் கன்றிய காதல் - கனவின்கண் மிகுந்த ஆசை, விளையின்கண் வீயா(த) விழுமம் தரும் - (அவ்வாசை) வினை யுங்கால் நீங்காத துன்பத்தைத் தரும். கருத்து. களவின்கண் காதல் விளைவின்கண் துன்பம் தரும். ரு. அருள்கருதி யன்புடைய சாதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். பொருள். அருள்கருதி அன்பு உடையர்.ஆரல்-அருளை அவாவி அன்பை உடையன ராதல், பொருள் கருதி பொச்சாப்பு பார்ப்பார் இல் - (பிறன்) பொருளை அவாவி (அவனுடைய) மற்தியை (எதிர்) பார்ப்பாரிடத்து இல்லை. அகலம். தருமர், நச்சர் பாடம் 'பொய்ச்சாப்பு'. கருத்து. களவு செய்வார்க்கு அன்பு உண்டாகாது. சு. அளவின்க ளின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர். 145. பொருள். கனவின்கண் கன்றிய காதல் அவர்-களவின்கண் மிக்க வேட்கையை யுடையவர், அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் (தமது) எல்லையின்கண் நின்று ஒழுகல் செய்யார். அகலம். தமது எல்லையின்கண் நின்று ஒழுகல் செய்வார்- பிறர் மனையின்கண் புகுந்து களவு செய்வர்.

196

196