பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம். மொழிமரபு. உங யகர இ-ள்:- அகரத்து இம்பர் யவகரப் புள்ளியும்-அகரத்தின் பின்னர் வொற்றும் வகர வொற்றும், ஐ ஒள நெடுஞ்சினை - ஐகாரம் ஒளகாரம் என்னும் நெட் டெழுத்தாம். மெய் பெற தோன்றும் (அவை) வடிவு பெறத் தோன்றும். உ-ம். ஐயவி, அய்யவி; ஒளவை, அவ்வை. 'மெய் பெறத்தோன்றும்' என்றதனால், அவற்றைக் கொள்க என்றவாறு. காலப் பழைமையில் ஏடு பெயர்த்து எழுதினோர் 'யவகரப்புள்ளி' என்பதனை "யகரப்புள்ளி' எனவும் 'ஐயௌ நெடுஞ்சினை' என்பதனை 'ஐயெ னெடுஞ்சினை' எனவும் பிழையாக எழுதினர் போலும். அப்பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கருதி உரையாசிரியர் அதற்குத் தக்கவாறு உரையெழுதிச் சென் றனர் போலும்.] ருஎ . ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. (en) இஃது, என் நுதலிற்றோ வெனின், உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக் கம் கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தேருங்காலை மொழிவயின் ஓர் அளபு ஆகும் இடனும் உண்டு- ஐகாரம் ஆராயுங்காலத்து மொழிக்கண் ஓர் அளவாய் நிற்கும் இடமும் உண்டு. உ-ம். இடையன், மடையன் எனவரும். தேருங்காலை என்றதனான் முதற்கண் சுருங்கா தென்பது கொள்க. இடன் என்றதனான் இக்குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க. [இச்சூத்திரத்திற்குப் பின்வருமாறு உரைத்தலே பொருத்தமுடைத்து:- இஃது, உயிர்களுள் இரண்டற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தேரும் காலை மொழிவயின் ஆன -ஆராயுங்காலத்து மொழிக்கண் நின்ற ஐகார ஒளகாரங்கள், ஓர் அளபு ஆகும் இடனும் உண்டு-ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு. 'தேருங்காலை' என்றதனான், தனியே நின்ற ஐகாரமும் ஔகாரமுமே ஒரு மாத்திரையாகு மென்றுகொள்க. உ-ம். பை,மை,கை;கௌ, சௌ, வெள். 'இடனும்' என்றதனான் இக்குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க. என்பன அசைகள். ஆர் மேல், "யகரப் புள்ளியும் ஐயெ நெடுஞ்சினை" என்ற பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கொண்டதால் உரையாசிரியர் ஈண்டு ஒளகாரத்தைக் கூறாது ஐகாரம் ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு என்று உரைத்துச் சென் தணர் போதும்.] ருஅ. இகர யகர மிறுதி விரவும். இதுவும் ஒர் போலியெழுத்து உணர்த்துதல் நுதலிற்று. (உச) இ-ள்:- இறுதி இகர யகரம் விரவும் -இகரவீற்று மொழிக்கண் யகரமும் (அதுபோல) இகரமும் விரவிவரும். உம். நாய் நாஇ எனக் கண்டுகொள்க. [விரவும் என்றதனால், அவையிரண் டும் கொள்க என்றவாறு.) (உரு)