பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227

எதிலும், அவ்வாறு பணித்தாலன்றி, அந்த மாநிலத்திற்குள் உள்ள தன்னாட்சி மாவட்டம் அல்லது தன்னாட்சி வட்டாரம் எதற்கும் பொருந்துறுதல் ஆகாது; மேலும், அந்த மாவட்ட மன்றம் அத்தகைய சட்டம் எதனையும் பொறுத்து அவ்வாறு பணிக்கும்போது, அந்தச் சட்டத்தினை அத்தகைய மாவட்டத்திற்கோ வட்டாரத்திற்கோ அவற்றின் பகுதி எதற்குமோ பொருந்துறச் செய்கையில் அந்த மாவட்ட மன்றம் தக்கதெனக் கருதுகிற விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அது செல்திறம் பெறும் எனப் பணிக்கலாம்;
(ஆ) ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக, இந்த உள்பத்தியின் (அ) கூறின் வகையங்கள் பொருந்துறாத நாடாளுமன்றச் சட்டம் எதுவும் அல்லது அசாம் மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அந்த மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டத்திற்கு அல்லது தன்னாட்சி வட்டாரத்திற்குப் பொருந்துறாது என்றோ அல்லது அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாவட்டம் அல்லது வட்டாரம் அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறும் என்றோ பணிக்கலாம்.

(2) இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின்படியான பணிப்புரை எதுவும், முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்.

12அ. மேகாலயா மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றிற்கு நாடாளுமன்றச் சட்டங்களும் மேகாலயா மாநிலச் சட்ட மன்றச் சட்டங்களும் பொருந்துறுதல் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ) இந்த இணைப்புப்பட்டியலின் 3ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடு எதனையும் பொறுத்து, மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட அல்லது வட்டார மன்றத்தினால் இயற்றப்படும் ஒரு சட்டத்தின் வகையம் எதுவும் அல்லது இந்த இணைப்புப்பட்டியலின் 8 ஆம் பத்தியின் அல்லது 10 ஆம் பத்தியின்படி அந்த மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட மன்றத்தினாலோ ஒரு வட்டார மன்றத்தினாலோ இயற்றப்படும் ஒழுங்குறுத்தும்விதி ஒன்றன் வகையம் எதுவும், அந்தப் பொருட்பாடு பொறுத்து மேகாலயா மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்படும் ஒரு சட்டத்தின் வகையம் எதற்கும் முரணாக இருக்குமிடத்து, அந்த மாவட்ட மன்றத்தினால் அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டார மன்றத்தினால் இயற்றப்படும் சட்டம் அல்லது ஒழுங்குறுத்தும்விதி, மேகாலயா மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்படும் சட்டத்திற்கு முன்போ பின்போ இயற்றப்பட்டிருப்பினும், முரண்பாடு உள்ள அளவுக்கு, இல்லாநிலையது ஆகும்; மேலும், மேகாலயா மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்படும் சட்டமே மேலோங்கி நிற்கும்;
(ஆ) குடியரசுத்தலைவர், நாடாளுமன்றச் சட்டம் எதனையும் பொறுத்து அறிவிக்கை வாயிலாக, மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கு அல்லது தன்னாட்சி வட்டாரத்திற்கு அது பொருந்துறாது என்றோ அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாவட்டத்திற்கு அல்லது வட்டாரத்திற்கு அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறும் என்றோ பணிக்கலாம்; மேலும், அத்தகைய பணிப்புரை எதுவும் முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/253&oldid=1466509" இலிருந்து மீள்விக்கப்பட்டது