பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

அதுமுதற்கொண்டும் அந்த ஒன்றியத்து ஆட்சிநிலவரையில் (இதன்பின்பு நேரிணையான புதிய மாவட்டம் எனச் சுட்டப்படும்) ஒரு தன்னாட்சி மாவட்டமாக இருக்கும்; மேலும், அதன் ஆளுகையர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆணைகளின்வழி, இந்தக் கூறின் வகையங்களைச் செல்திறப்படுத்தத் தேவையான விளைவுறு திருத்தங்கள் இந்த இணைப்புப்பட்டியலின் (அந்தப் பத்திக்குப் பிற்சேர்க்கையாகவுள்ள அட்டவணையின் IIIஆம் பகுதி உள்ளடங்கலாக) 20 ஆம் பத்தியில் செய்யப்பட வேண்டும் எனப் பணிக்கலாம்; அதன்பின், மேற்சொன்ன பத்தியும் மேற்சொன்ன IIIஆம் பகுதியும் அதற்கிணங்கத் திருத்தப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படும்;
(ஆ)குறித்திடப்பட்ட தேதியை ஒட்டிமுன்பு மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையில் நிலவிவந்த ஒரு தன்னாட்சி வட்டாரத்தின் (இதில் இதன்பின்பு நிலவுறும் வட்டார மன்றம் எனச் சுட்டப்படும்) வட்டார மன்றம் ஒவ்வொன்றும், அந்தத் தேதியன்றும் அதுமுதற்கொண்டும், நேரிணையான புதிய மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட மன்றம் முறையாக அமைக்கப்படுகிற வரையில், அந்த மாவட்டத்தின் (இதில் இதன்பின்பு நேரியணையான புதிய மாவட்ட மன்றம் எனச் சுட்டப்படும்) மாவட்ட மன்றம் எனக் கொள்ளப்படும்.

(2) நிலவுறும் வட்டார மன்றத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும், அவர் தேர்ந்தெடுக்கப்பெற்றிருப்பினும் அல்லது நியமனஞ்செய்யப்பெற்றிருப்பினும், நேரிணையான புதிய மாவட்ட மன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பெற்றிருக்கிறார் அல்லது நியமனஞ்செய்யப்பெற்றிருக்கிறார் எனக் கொள்ளப்படுவார்; மேலும், நேரிணையான புதிய மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட மன்றம் இந்த இணைப்புப்பட்டியலின்படி முறையாக அமைக்கப்படுகிற வரையில், அவர் பதவி வகிப்பார்.

(3) நேரிணையான புதிய மாவட்ட மன்றத்தினால் இந்த இணைப்புப்பட்டியலின் 2ஆம் பத்தியின் (7) ஆம் உள்பத்தியின்படியும், 4ஆம் பத்தியின் (4)ஆம் உள்பத்தியின்படியும் விதிகள் வகுக்கப்படுகிற வரையில், நிலவுறும் வட்டார மன்றத்தினால் மேற்சொன்ன வகையங்களின்படி வகுக்கப்பட்டு, குறித்திடப்பட்ட தேதியை ஒட்டிமுன்பு செல்லாற்றலில் இருந்த விதிகள், மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் ஆளுகையரால் அவற்றில் செய்யப்படுகிற தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, நேரிணையான புதிய மாவட்ட மன்றம் தொடர்பாகச் செல்திறம் உடையன ஆகும்.


20ஆ பத்திக்குப் பின்பு, பின்வரும் பத்தி, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்துறுமாறு, ஆறாம் இணைப்புப்பட்டியலில், 1988 ஆம் ஆண்டு அரசமைப்பு (திருத்தம்) சட்டத்தின் (67/1988) 2ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது:-
"20ஆஆ.ஆளுநர் தமது பதவிப் பணிகளை ஆற்றுகையில் தமது உளத்தேர்வுப்படியான அதிகாரங்களைச் செலுத்துதல் :
ஆளுநர் இந்த இணைப்புப்பட்டியலின் 1ஆம் பத்தியின் (2), (3) ஆகிய உள்பத்திகள் (2)ஆம் பத்தியின் (1), (7) ஆகிய உள்பத்திகள், (3)ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தி, 4ஆம் பத்தியின் (4)ஆம் உள்பத்தி, 5ஆம் பத்தி, 6ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தி, 7ஆம் பத்தியின் (2)ஆம் உள்பத்தி, 9ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தி, 14ஆம் பத்தியின் (1)ம் உள்பத்தி, 15ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தி, 16ஆம் பத்தியின் (1), (2) ஆகிய உள்பத்திகள் ஆகியவற்றின்படி தனது பதவிப்பணிகளை ஆற்றுகையில், அமைச்சரவையும் தாம் தேவையெனக் கருதினால் தொடர்புடைய மாவட்ட மன்றங்களையும் அல்லது வட்டார மன்றங்களையும் கலந்தாய்வு செய்தபின்பு, தம் உளத்தேர்வின்படி தேவையென தாம் கருதுகிற நடவடிக்கையை எடுப்பார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/261&oldid=1466528" இலிருந்து மீள்விக்கப்பட்டது