பக்கம்:அழியா அழகு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 அழியா அழகு

காடாள வேண்டுமென்றும் சொன்னாள். அதைக் கேட்டு அவ்வாறே செய்யத் துணிந்த இராமன், "இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக'க் கோசலையை அணுகினன். கோசலையினிடம் செய்தியைக் கூறித் தேற்றிச் சுமித்திரையைக் காணச் சென்ருன்.

இந்தச் செய்தியைக் கேட்ட இலக்குவன் காலத்தியென மூண்டு எழுந்தான். கையில் வில்லே எடுத்து காணேற்றி ன்ை. அதன் ஒலியைக் கேட்ட இராமன் அவனிடம் வந்து பேசுகிருன். அவன் சினத் தீயை அவிக்கின்ற அஞ்சன மேகம் என்ன வந்து சொற்றுளி மாரி வழங்குகிருன். பல வியாயங்களைக் கூறி, "தம்பி, ஆற்றில் தண்ணிர் இல்லை என்ருல், அது ஆற்றின் பிழையா? கம்முடைய தந்தை பிழையா இது? அன்று; நம்மைப் பெற்றுப் புரந்தவளுடைய பிழையும் அன்று; மகளுகிய பரதனுடைய பிழையும் அன்று: மைந்த, அவர்களைச் சினந்து பயன் இல்லை. இது விதியின் பிழை அப்பா அதை உணராமல் இதற்கு இப்படிக் கோபிப்பது எதற்காக?' என்று கேட்கிருன்,

" கதியின் பிழைஅன்று கறும்புனல்

இன்மை, அற்றே பதியின் பிழைஅன்று பயந்து

கமைப்பு ரந்தாள் மதியின் பிழைஅன்று; மகன்பிழை

அன்று: மைக்த, விதியின் பிழை:நீ இதற்கென்ன வெகுண்டது' என்றன். ' எல்லாரும் விரும்பும் வகையில் விதி கோணலாகாமல் விகழ்ச்சிகளே நடத்தியிருந்தால் இது நேர்ந்திருக்காது.

1. தகர் நீங்கு. 2 2. நகர் நீங்கு. 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/192&oldid=523394" இலிருந்து மீள்விக்கப்பட்டது