பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பெத்ரோசியன் (1932) அம்மாவின் வீடு அம்மாவின் வீட்டுக்கு அவன் தனியாக ஒரு சாவி வைத்திருந் தான். வழக்கமாக அவன் வாசல் மணியை அடிப்பதில்லை. ஏனெனில், அவன் அம்மா துரங்கிக்கொண்டிருந்தால் விழித்து விடுவாள்; அல்லது, துரங்காமலிருந்தால் அவள் அதைக் கேட்க மாட்டாள். நாலைந்து மாதங்களாக அவன் அம்மாவைப் பார்க்க வில்லை. மாஸ்கோவுக்கும் அயல்நாடுகளுக்கும், பல்வேறு பெரிய அலுவல்கள், சிறு வேலைகள் என்று போயிருந்தான். 'ஓ, எனக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால்.’’ அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். தாழ்வாரத்தில் விளக்கு எரிந்தது. 'அம்மா-அம்மா!' பதில் இல்லை. அவன் அறைக்குள் போனன். படுக்கை நன்கு விரிக்கப் பட்டிருந்தது. தரை சுத்தமாக இருந்தது. ரேடியோ ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. அவன் அம்மா எப்போதும் ரேடியோவைக் கத்தவிட்டிருப்பாள். அது ஏதோ மனிதக் குரலாக இருக்கிறதே. நான் உள்ளேயும் வெளியேயும் போய் வரும்போது, எனக்கு நானே பேசிக்கொள்கையில், எனக்குப் பதில் கிடைப்பதுபோல் தோன்றுகிறது’’ என்று அம்மா கூறுவாள். அம்மா சமையலறையிலும் இல்லை, பால்கனியிலும் இல்லை. வழக்கமான அசிரத்தையுடன் அவன் ரேடியோவை நிறுத்தினன். பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த பழைய சோபாவில் படுத்தான். அம்மா வீட்டில் இல்லாததும் சரிதான்: மெத்தச் சரியானதே. - அம்மா குடிப்பதற்கு ஏதாவது வைத்திருக்கிருளா? அவன் சோம்பலோடு எழுந்து, ரிப்ரிஜெரேட்டரைத் திறந்தான். அரை பாட்டில் பிராந்தியும், இரண்டு பாட்டில் பீரும் இருந்தன. அவை சூடாக இருந்தன. அவன் பீர் புட்டியைத் திறந்தான். அவளுல் ஒரு வாய்கூட விழுங்க முடியவில்லை. அது புளித்துப் போயிருந்தது. அவன் தேதியைப் பார்த்தான். ஒரு மாதம் ஆகியிருந்தது. வாகனுக்கு பீர் ரொம்பவும் பிடிக்கும் என்று