பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அம்மாவின் வீடு அவன் அம்மா அறிவாள். அவன் மூன்று நான்கு மாதங்களாக ஊருக்கு வரவில்லை. அந்த நினைப்பை அவன் தன் மனசிலிருந்து அகற்றினன். தனிமை என்று கூறப்படும் உலகின் பயனை நன்கு அனுபவிக்க, எதைப்பற்றியும் சிந்திக்காமலிருக்க அவன் ஆசைப் பட்டான். அதிலும் விசேஷமாக, தன்னைச் சுற்றிலும் ஒளி நிறைந்த ஊர் அமைதியோடு நிலவ, குழந்தைகளின் தனிக் குரல் களும், பூச்சிகளின் மந்தமான சலிப்பூட்டும் இரைச்சலும் மாத்திரம் கேட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையை அனுபவிக்க விரும்பினன். அவன் அம்மா வீடு ஒதுக்குப்புறத்தில், தோட்டங் களுக்கு நடுவில் இருந்தது. அங்கே கார்கள் வருவதில்லை. அவனிடமும் கார் கிடையாது. அவன் திரும்பவும் சோபாவில் படுத்து, எதையும் சிந்திக்காமலிருக்க முயன்ருன். அம்மாவும் நகருக்கு வந்து தங்களோடு வசிக்கவேண்டும்; மாரிக்காலத்திலாவது அவள் அவ்வாறு செய்யவேண்டும் என்று அவளை வலியுறுத்திக் கூப்பிடுவதற்காக அவன் வந்திருந்தான். சக்திவாய்ந்த பேச்சு ஒன்றை அவன் நினைத்துப் பார்த்தான். "இது கேவலம், அருமை அம்மா. நான்தான் உனக்கு எல்லா மான ஒரே மகன். ஆண்டவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. அதில் நான்கு அறைகள் உள்ளன. உனக்கு உன் மருமகளையும் பிடித்திருக்கிறது. இது வெட்கமாக இல்லையா? இன்னும் எத்தனை காலம் தனிமையில் உன் வாழ்நாளைக் கழிக்கப் போகிருய்?’ என்று அவன் கேட்பான். டெலிபோன் மணி அலறியது. இனிமையான அசதி உடனே ஒடிமறைந்தது. அந்த அலறல் மீது அவனுக்கு மிகுந்த அலுப்பு. டெலிபோன் அலறிக்கொண்டேயிருந்தது. அவன் எழுந்து, மெதுவாய் சோம்பலுடன் நடந்தான். அது அலறுவதை நிறுத்தி விடலாம். அவன் ரிசீவரை எடுத்தான். 'அனுஷ் அத்தை?’’ அது ஒரு பெண்ணின் குரல். 'நான் உன்னைத் துரக்கத்திலிருந்து எழுப்பிவிடவில்லை என்று நம்புகிறேன். நீ நகருக்குப் போகிருயா என்று கேட்க நினைத்தேன். ஆராமேய்ஸ் அவன் காரில் உன்னை அழைத்துப் போவான். அவன் நான்கு மணிக்குப் போவான்.” அந்தப் பெண் நிறுத்தாமல் பேசிள்ை. 'அவனைக் காத்திருக்கும்படி நான் சொல்கிறேன். நீ போகிருயா?’ அம்மா வீட்டில் இல்லை’ என்ருன் அவன். நல்லது’’ என்று அந்தப் பெண் சொன்னள். ஃபோன் பஸ்-பஸ்-பஸ்ஸ் என்றது. பேச்சு துண்டிக்கப் பட்டது. வாகன் புன்னகைத்து, ரிசீவரை அதன் இடத்தில் வைத்தான். அவள் யாரோ என்று அவன் அதிசயித்தான். பிறகு அவன் உண்மையாகவே தளர்ச்சி அடைந்தான். இந்த நாலு சுவர்களுக்கிடையில் நீ எத்தனை காலத்துக்கு அடைபட்டுக்