பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இலக்கியக் காட்சிகள்


வனுக்கு வாலியினிடமிருத்து இரண்டையும் மீட்டுத் தருவ தாக உறுதியளிக்கின்றான். இராமனிடத்தில் ஒத்த வுணர் also, oil-L- assors asso (Sympathy and Empathy) gods; Go; அமைந்திருந்ததால்தான் உடனே உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பிறிதின் நோய் தன்னோய் போல் போற்றும் தகைமை கிட் கிந்தா ராமனிடம் கானப் படுவது கண்கூடு. எவரையும் பார்த்த அளவில் அவர்தம் பண்பாட்டைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன் இராமன் என்பது இந்தக் காண்டத்தில்தான் தெளிவுறுகின்றது எனலாம். பரதனைச் சேனுயர் தருமத்தின் தெய்வம் என்று கூறினானேயெனில் தம்பியைப் பற்றி அறிவதற்குத் தனித்த ஆற்றல் வேண்டுமோ? அனுமனைக் கண்ட அளவிலேயே,

இல்லாத வுலகத் தெங்கும் ஈங்கிவன் இசைகள் கூரக் கல்லாத கலையும் வேதக் கடலுமே யென்னுங் காட்சி சொல்லாலே தோன்றிற்றன்றே யார்கொலிச் சொல்லின் (செல்வன் வில்லார்தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவல்

லானோ!

(கிட் அனுமப்படலம் : 20)

என்று வியக்கின்றான் இராமன். ஒர் உண்மையின் ஈண்டு உணர்தல் வேண்டும். இராமனைப் போற்று கின்றவர்கள் பலருண்டு. ஆயின் இராமனே போற்றும் புகழும், வியக்கும் சிறப்பும் அனுமனிடத்தில் இருப் பதைக் கா ண் கி ன் றோ ம். கைம்மாறு கருதாத ஒர் உயர் படைப்பாகத் தொண்டின் திருவுருவமாகத் திகழக் கூடிய தகுதி அனுமனுக்கேயுண்டு என்பதை முழுமையும் உணர்ந்த பெற்றி, கிட்கிந்தா காண்ட இராமனுக்குண்டு. இறுதியில் அனுமனை ஆரத் தழுவிக் கொண்டு பெருமைப் படுத்துகின்றான் இராமன். ஆரணிய காண்டத்தில் குகனைத் தன் உடன் பிறப்பாகக் கொண்டான். தொண்