பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இலக்கியக் காட்சிகள்


கிறித்துவுக்கு முன்

கிறித்துநாதர் பிறப்பிற்கு முன்னரே தமிழர் திரை கடலோடியும் திரவியந் தேடினர்; கி. மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் என்னும் கிரேக்க அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை: யானைத் தந்தம், மணப் பொருள்கள் முதலியன சென்றன. மயிலைக் குறிப்பிடும் தோகை’ என்ற தமிழ்ச் சொல் ஈப்ரூ மொழியில் “துகி’ என்று வழங்குவதாயிற்று. அம் மொழியில் ‘அகல்’ என்பது மணப்பொருளாம் அகிலைக் குறிப்பதாகும். பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் திமில் உடைய எருதுகள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சேரநாட்டு மிளகினைப் பொலீசிரியர்கள் விரும்பி வாங்கித் தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். ‘யவனப் பிரியா’ என்றே மிளகு வழங்கப் பெற்றது. தமிழ்நாட்டு வணிகர் கொண்டு சென்ற பொருள்களை ஏடன் துறை முகத்தில் அ ரே பி யர் க ள் பெற்று ஆப்பிரிக்கருக்கு விற்றனர். கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பி வைக்கப்பெற்ற அரிசி, மயில், சந்தனம் முதலிய பொருள் களின் பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதனைக் காணும்பொழுது ப எண் ைட த் தமிழர்தம் கடல் வாணிகச் சிறிப்புத் தெற்றெனப் புலப்படும்.

புலவர் பெயர்கள்

மேலும் பழந்தமிழ்ப் புலவர் பலர் வாணிகத்தில் மேம்பட்டிருந்ததனை அவர்தம் பெயர் கொண்டே

2. பி.டி. சீனிவாச ஐயங்கார்; தமிழர் வரலாறு;

பக்கங்கள் 129-134. -

3. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி; .ெ த ன் னி ந் தி ய

வரலாறு. பக்கங்கள் 76-78.