பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் கலமும் 27

அறியலாம். மதுரைச் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார். மதுரைப் பொன் வாணிகனார் மகனார் ந ப் பூ த ன ா ர், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங் கொற்றனார் முதலி

யோரின் பெயர்கள் இவ்வுண்மையை உணர்த்தும்.

முந்நீர் வழக்கம்

தொல்காப்பியனார் கடற்பயணத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

‘முந்நீர் வழக்கம் மகடுவோ டில்லை’ என்று அவர்

கடற் பயணத்திற்குப் பெண்களை உடனழைத்துச் செல்லக் கூடாது என்று விதி கூறியிருப்பது கொண்டு தமிழர் தம் கடற் செலவினைக் குறித்து அறியலாம். மேலும் தமிழர் கடற்பயிற்சி மிக்கிருந்த காரணத்தால், ஆர்கலி, ஆழி, புணரி, முந்நீர், பவ்வம், பரவை, கடல் முதலான பல சொற்கள் கடலைக் குறிக்க ஏற்பட்டன. மேலும், கலங் களைக் குறிக்கும் ஒடம், பரிசல், புணை, தோணி, அம்பி, திமில், படகு, கலன், கப்பல், நாவாய், வங்கம் முதலான பெயர்களும் தமிழர்தம் க ட ல் வாணிபச் சிறப்பை யுணர்த்தும்.

களியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட வுரவோன் மருக’ என்று சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்

குயத்தியார் பாடுவதனின்று தமிழர் கடல் வாணிகச் செய்தி துலக்கமுறும்.

4. தொல்காப்பியம்; அகத்திணையியல்; நூற்பா : 37 5. புறநானூறு 66 : 1-2