பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இலக்கியக் காட்சிகள்


வெறியாட்டு’ என்று வழங்குவர். முருகனுக்கு இயல்பாய நறுமணத்தை வெறி’ என உரைப்பர். இது குறித்தே சங்க காலப் புலமைச் சான்றோராகிய நக்கீரனாரும் திருமுருகனைக் குறிப்பிடவந்த விடத்து மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார். தெய்வம் மக்கள்மீது வந்து ஆடுவதை வெறியாட்டென்று வழங்குவர். சங்க இலக்கியங்களில் முருகவழிபாடு கூறப் படும் இடங்களிலெல்லாம் வெறியாட்டு’ எனப்படும் இத்தகைய கூத்துகள் வருணிக்கப்பட்டுள்ளன. வழி படுவோர் தெய்வம் தம்மிலே வந்து வெளிப்படும் என்னும் நம்பிக்கையுடன் கூத்தாடினர்.

தொல்காப்பியனார் கூறும் இலக்கணம்

தொல்காப்பியனார் தம் பொருளதிகாரத்தில்,

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும்”

என்று, இவ் வெறியாட்டைக் குறிப்பிட்டுள்ளார். வெறியாடலின் இயலை உணர்ந்தவன் வேலன் என்னும் பெயருடையோன் என்றும், வெறியாட்டிற்குக் காந்தள் என்றொரு பெயரும் உண்டென்றும் நாம் இந்நூற் பாவால் அறியலாம். செவ்வேட் பெருமானின் திருக்கை யிற் பொலிவுபெறக் கொலுவிருக்கும் வேலைத் தான்

7. நாவலர் ந. மு வேங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை - அக நானுாறு உரை, கழகப் பதிப்பு: ப. 231.

8. திருமுருகாற்றுப்படை, அடி 290.

9. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை யியல்; நூற்பா 60. -