பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு 4 I


ஏந்தி ஆடுவதால் இம் முருககோயிற் பூசாரி வேலன் என்று வழங்கப்பெற்றான். இவ் வேலன் வெறியாட்டாளன் என்றும், படிமத்தான் என்றும் வழங்கப்பெறுவான். இவ் வெறியாட்டு அகத்திணை, புறத்திணை ஆகிய இரண்ட னுக்கும் பொதுவானதாகும்.


நச்சினார்க்கினியர் நவிலும் விளக்கம்


‘செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேல னென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறினமையிற் கணிகாரியையுங் கொள் க. காந்தளையுடைமையானும், பனந்தோடுடைமையானும், மகளிரை வருத்துதலானும், வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனாலும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை; ஒழிந் தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.'”


என்பது அ வ ர் காட்டும் உரையாகும். எடுத்துக் காட்டாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிட்டு, இது சிறப் பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று’ என்றும் குறிப்பிட் டுள்ளார். பாடல் வருமாறு :


அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரக த்துத் தன்மறந் தாடுங்-குமரன்முன் கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா ரேர்க்காடுங் காளை யிவன்.


பின்னர் வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது என்று கூறி, வெறி பாடிய காமக்கண்ணியாரின் அகப் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார். அப் பாட்டு வருமாறு:


அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங் கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்


10. தொல்: பொருள். நூற்பா 60. நச்சி. உரை.