உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இலக்கியக் காட்சிகள்

இதுவென அறியா மறுவரற் பொழுதில் படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் அதுவாய்க் கூறக் களங்கன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளங்கர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு து உய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்...... ஆர நாற வருவிடர்த் தகைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீ இய பார்வல் ஒதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல கன்மனை நெடுங்கர்க் காவலர் அறியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்கு தொறு மெய்ம்மலிந்து நக்கென னல்லெனோ யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலங்தமை கண்டே.”

“இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை

யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய காந்தள் அகத்திற்கு வந்தது. இது வேத்தியல் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாதலிற் பொதுவியலு மாயிற்று’ என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கானும் பாடலைக் கூர்ந்து விளக்கம் பெற்றால்

வெறியாடல் ஏன் மேற்கொள்ளப் பெறுகின்றது என்பதும் அதன் அகப்பொருள் அமைதியும் நன்கு தெரிய வரும்.

அகநானுாறு : 22