பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

தமிழுக்குத் தொண்டாற்றியவர்


ல்லாண்டு காலமாகப் பன்மொழிப்புலவரிடம் நெருங்கிப் பழகியவன் என்ற வகையிலும்-அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை அறிந்தவன் என்ற முறையிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

ஆசிரியராக இருந்து பணியாற்றிய காலத்தில் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட வரையில் இன்றைய தினம். அவர் தமிழுக்குத் தொண்டாற்றுகின்ற பலவழிகளையும் அறிந்து பாராட்டுகிறேன்.

மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால் அதை அங்கே ஏற்றுக்கொள்வதற்கு ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஒருவரை அறிவாளியென்று சொன்னால் “என்ன அறிவு" பெரிய அறிவு என்று தன் அறிவைக் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளைப் போல் எழுத்துத் துறை--பேச்சுத் துறை--வேறு எந்தத்துறையானலும் உற்சாகமாக ஈடுபடுவது மிகக் கடினம்.

இத்தகைய கடினமான தொண்டை முப்பது முப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பிருந்தே அப்பாதுரையார் அவர்கள் தொடங்கி பணியாற்றி வருகிறார்கள்.

அவர் வாழ்க்கை பூஞ்சோலையல்ல--வறுமைச் சூழலிலே தன் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டிருப்பவர். அவர் நினைத்திருந்தால் பல்கலைக் கழகத் துணைவேந்தராகும் அளவுக்கு இன்று தன்னை உயர்த்தியிருக்கக் கூடும்; ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. எந்தெந்த விதங்களில்--

உ.--5