பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


மந்திரிப் பதவியில் நாங்கள் இருப்பதால் ஏதோ மகிழ்ச்சியோடிருக்கிறோம் என்று காங்கிரஸ்காரர்கள் நினைக்க வேண்டாம்!

தேர்தலுக்கு முன்பேகூட நான் கூறியிருந்தேன். "நாங்கள் ஆட்சிப்பீடம் ஏறவேண்டும் என்பதில் எங்களுக்கு அவசரமில்லை, மக்கள் ஆணையிட்டால் வருகிறோம்; பொறுத்திரு, இன்னும் ஐந்தாண்டு காலம் என்றாலும் பொறுத்திருக்கத்தயார்" என்றுதான் கூறினேன்.

ஆனால் நாட்டு மக்களுக்குத்தான் அவசரம்! ஆகாத ஆட்சியை எத்தனை நாளைக்குத் தாங்கிக் கொள்வது? இருளில் எத்தனை நாள் தவிப்பது? உதயசூரியன் ஒளி என்று கிடைக்கும்?--என்று ஏங்கிய மக்கள்தான் எங்களுக்கு ஆணையிட்டார்கள்; ஆளுகிறோம்!

முன்பு (1938-ல்) நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கே கூச்சமாக இருக்கும்.

சென்னை நகரின் மத்தியப் பகுதியில் மயிலை சிவமுத்து என்ற ஒரு பெரியவர்--அவரது தமக்கையார்--அவருக்குத் துணையாக டாக்டர் தருமாம்பாள் ஆகியோர்--இன்னும் சிலர்!

இப்படிப் பல் போன பெரியவர்கள் பத்துப்பேர். மீசை முளைக்காத எங்களைப்போன்றவர்கள் ஐந்து பேர். மீசை முளைத்த வாலிபப் பருவமுடைய மணிமொழியார் போன்றவர்கள் ஐந்து பேர், ஆக 20 பேருடன் மெல்லிய குரலில் "இந்தி ஒழிக! இந்தி ஒழிக!" என்று ஒலியெழுப்பிச் செல்வோம்.

எங்கள் ஊர்வல ஒலியைக் கேட்டு, வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வந்து பார்க்க மாட்டார்கள். ஏனென்றால்