பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


நாங்கள் கொடுக்கும் குரல் வீட்டைக் கடந்து, வீட்டுக்கூடத்திற்குக் கூடச் செல்லாது!

அப்படி எங்களுக்குள் பேசிக்கொள்வதுபோல் இந்தி வேண்டாம் என்று குரல் கொடுப்போம்!

இந்தி ஒழிக, என்று உரத்த குரலில் கூறினால் ஆயிரம் பேர் சேர்ந்து கொண்டு ஏன் இந்தி ஒழிய வேண்டும் என்று மிரட்டினாலும் மிரட்டுவார்கள்.

ஆனால் இன்றுள்ள நிலைமை வேறு; இந்தி வாழ்க--என்று கூறுவதற்கு இந்திக்காரரே கூச்சப்படுகிறார்.