பக்கம்:உயிரில் கலந்தது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

ஏடு ஏழு:

“...நன்றி சுரக்கும் நெஞ்சோடு நான் அல்லும் பகலும் அறுபது நாளிகையும் என்னுடைய அடி நாட்களே ஞாபகப் படுத்தியவாறேதான் இருந்துவருகிறேன். இந்த ஒரு பரிபக்கு வம் எனக்கு அப்பியாசப்பட்ட காரணத்தினுல்தான், என் னுள்ளே என்னையும் அறியாமல், ஒரு தியாக மனம் உருவாகிப் பக்குவப்பட்டு வருவதைக் காண்கிறேன். ஏனென்றால், என் திமித்தம்பல பல தியாகங்களைச் செய்யதவர்களுக்கு நான் நன்றிக் கடன் செலுத்தி ஆக வேணும். அந்தச் சந்தர்ப் பத்தை ஆண்டவன் எப்போது எந்த ரூபத்தில் எனக்கு அறி முகப்படுத்தப் போகிருரோ? நான் எப்படி உணர முடியும்? நான் அப:ை அதிலும் பெண் ஆக, என் கடனை நான் பூர்த்தி செய்துதான் தீருவேன். இல்லாதுபோனல், நான் என் மனச் சாட்சிக்கு மட்டுமல்லாமல், தெய்வ மறையாம் திருக்குறளுக்கும் அநீதி இழைத்தவளாக ஆவேன்.”

ஏடு ஒன்பது:

கோமளம் என் பால்ய சிநேகிதி. அந்த நாளில் எனக்கு உண்டி கொடுத்தார் அவள் அப்பா. இப்போது செயலிழந்து விட்டார். ட்யூஷன் சொல்லிக் கொடுத்த சம்பளத்தை தரவேண்டுமென்று எதிர்பார்த்தாள் அவள். அவ்வாறே செய்தேன். என்றையும்விட, அன்று தினம் ராத்திரி எனக்கு நல்ல துாக்கம் வந்தது.

ஏடு இருபது:

ஆகா!ஆசிரியர் ஞானசீலனின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்யம் கிடைத்ததே, அதுவே எனக்குப் பெரிய ஆறுதலாகத் தோன்றுகிறது. வாழ்க்கையை வாழ்க்கையாகச் சித்தரிப்பதில் வல்லவராகவே இருக்கிறார்.அவர் அறிமுகம் கிட்டியதுகூட பூர்வஜென்மப் பலகைத் தான் இருக்க வேணும். இல்லாது போனால் எனக்கு அவர் பழக்கமும் அன்பும் கிடைத்திருக்கக் கூடுமா என்ன?.