பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் பாரதியும்

23


பிராயம் எழுதினார். இதைப் பார்த்த பாரதியார் மிகவும் வருத்தப்பட்டார். நம்மைத்தாங்கி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று ஏங்கினார்.

***

அப்பொழுது சென்னையிலிருந்து ஒரு வெள்ளைக்காரன் பாரதிக்குக் கடிதம் எழுதியிருந்தான். "நான் யார் தெரியுமா? தாகூரின் கவிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவருக்கு உலகத்தில் கீர்த்தியை வாங்கிக் கொடுத்தானே அவனிடமிருந்தவன் நான். சிறந்த தமிழ்க் கவி என்று கேள்விப்பட்டேன். உம்முடைய கவிகளை நமக்கு நீர் எழுதியனுப்பவும் என்று எழுதியிருந்தான். பாரதியார் எழுதினார்:

வேண்டுமடி யெப்போதும் விடுதலை -- அம்மா!
தூண்டு மின்பவாடை விசுதுய்ய தேன்கடல்
சூழநின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோ டமுத முண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய

நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ

இரண்டு நிமிடத்தில் பாரதியார் எழுதினார். இரண்டு தினங்களில் இங்கிலீஷ் கவி வந்தது. பாடினார். ஆஹா! அதே உருவத்தில் அமைத்து விட்டானே கவியை என்று பாராட்டினார். அந்தக் கவி இங்கிலீஷ் பத்திரிகைகளில் வெளிவந்தது. பெரியவர்கள் ரசித்தனர். அப்பொழுது 'சுதேச


கவிஞர் பேசுகிறார்