பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழும் பாரதியும்


மித்திரன்' ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "நீங்கள் அடிக்கடி கவி எழுதுங்கள்" என்று. தமிழ் நாட்டின் நிலை அப்படி யிருந்தது. தமிழ்ச் சுவையை இங்கிலீஷால் அறிய முடியுமா? தமிழ்ப் பாட்டின் இனிமை தமிழனுக்குத் தெரியவில்லை; இங்கிலீஷ்காரன் தமிழ்ப்பாட்டு நன்றாயிருக்கிறது என்று சொன்ன பிறகு தான் தமிழனுக்குத் தெரிகிறது.

நமக்குப் பிடித்ததை மட்டும் தான் கவி எழுத வேண்டுமென்று விரும்புவது தவறு. யாருடைய விருப்பத்துக்காகவும் கவி பாட முடியாது. "கவிஞன் இஷ்டம்போல் பாட வேண்டும். எல்லாருக்கும் பொதுவாயிருக்க வேண்டும்; எதிலும் சேரக்கூடாது என்றெல்லாம் சொல்வது தவறு.

எதைப்பற்றியும் கவி பாடலாம். எல்லாருக்கும் இன்பத்தை ஊட்டலாம். எளிதாகச் சொல்லலாம். உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாக்கலாம் என்பவைகளை நிரூபித்துக் காட்டினவர் பாரதியார்.

***

பாரதி ஜாதியை ஒழிக்கிறான், அனுஷ்டானமற்றவன், ஆசாரமற்றவன், என்றெல்லாம் அப்பொழுது தூஷித்தார்கள். அவருடைய மனைவியிடம் "எல்லாப் பெண்களும் நகை போட்டிருக்கிறார்களே உனக்கில்லையே, உன் புருஷனைக் கேள்"


கவிஞர் பேசுகிறார்