பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இசை என்பது என்ன?


வீரப்பாடல் எனில் பசையற்ற நெஞ்சையும் துடித்தெழும்படி செய்கிறது. இதற்குச்சான்று பிரான்ஸ் தேசத்து உலகம் புகழ் பெற்ற மர்ஸேயேஸ் என்னும் போர் நடைப் பாட்டு ஒன்றே போதும்.

சோகப் பாட்டு, சோகம் பொழிவதைச் சந்திரமதி புலம்பலே சொல்லிவிடும்.

பாட்டுக்கு முன் வறுமை பறக்கிறது. பாட்டுக்கு முன் பசி பறக்கிறது. "செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று கூறினார் வள்ளுவர்.

பிச்சைக்காரன் பாடிக்கொண்டே பிச்சை கேட்கிறான். அவனுக்குச் சோறு கிடைக்காவிடில், பாட்டோடு தூங்கி விடுகிறான் இரவில்.

பாட்டில் இன்னொரு சொக்குப் பொடி. பகலெல்லாம் உழைத்து, அரைத்தூக்கத்தில் கிடக்கும் ஒரு பெண்ணையும், பிச்சைக்காரனின் தெருப்பாட்டு எழுப்பி விடுகிறது. விசையாய் எழுந்து பிச்சையிடுகிறாள்.

இன்னொன்று கேளுங்கள். மூக்கறையன் பாடினால் நன்றாயிராது. பாடாமல் இருப்பதில்லை. ஙொண ஙொண என்று பாடுகிறான் உரக்க, பல்லில்லாக்


கவிஞர் பேசுகிறார்