இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
163
நரந்தம்—பூ தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் வகை | : | டிஸ்கிபுளோரே (Disciflorae) அகவிதழ்கள் பிரிந்தவை. |
தாவரக் குடும்பம் | : | ரூட்டேசி (Rutaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சிட்ரஸ் (Citrus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | மெடிகா (medica) |
தாவர இயல்பு | : | சிறுமரம் |
இலை | : | மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை; எனினும், பக்கத்துச் சிற்றிலைகள் பெரிதும் அருகி ஒழிந்தன. ஒரு சிற்றிலை மட்டுமே காணப்படும். எனினும், இன்றும் சிக்மகளுர் ஆய்வுச் சோலையில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட நாரத்தை வளர்கிறது. சிற்றிலை முட்டை வடிவானது; சுரப்பிகளைக் கொண்டது. |
மஞ்சரி | : | கலப்பு அல்லது நுனி வளராப் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும். |
மலர் | : | சிறியது; வெண்மையானது. நறுமணம் உள்ளது. |
புல்லி வட்டம் | : | கிண்ணம் போன்று குவிந்தது. |
அல்லி வட்டம் | : | 4-8 அகவிதழ்கள்; வெண்மையானவை. சற்று நீண்ட இதழ்கள்; தழுவிய அடுக்கு முறை; அல்லிக்கு அடியில் (டிஸ்க்) வட்டத்தண்டு இருக்கும். |
மகரந்த வட்டம் | : | 20-60 வரையிலான தாதிழைகள் வட்டத் தண்டிலிருந்து உண்டாகும் மகரந்தப் பைகள் மஞ்சள் நிறமாக இருக்கும். |