இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
749
வேழம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | குளுமேசி (Glumaceae) |
தாவரக் குடும்பம் | : | கிராமினே (Gramineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சக்காரம் (Saccharum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | அருண்டினேசியம் (arundinaceum) |
சங்க இலக்கியப் பெயர் | : | வேழம் |
உலக வழக்குப் பெயர் | : | வேழக் கரும்பு, பேய்க் கரும்பு, கொறுக்காந் தட்டை, நாணல் கரும்பு |
தாவர இயல்பு | : | புதர்ச் செடி, இது கரும்பஞ் செடியைப் பெரிதும் ஒத்தது. இதுவும் 20 அடி உயரம் வரை வளரும். கணுக்களை உடையது. |
இலை | : | 6 அடி வரை நீளமும், 1-2 அங்குல அகலமும் உடையது. |
மஞ்சரி | : | கரும்பைப் போன்றது. கலப்பு மஞ்சரி. இது ‘கல்ம்’ என்ற தண்டின் நுனியில் கிளைத்து வள்ரும். வெண் சாமரை போன்றிருக்கும். |
மலர் | : | வெண்ணிறமானது. எல்லா வகையிலும், கரும்பின் மலரை ஒத்தது |
இதன் தண்டு ‘கல்ம்’ உட்கூடு உடையது. இதன் தண்டு என்ற குச்சிகள், கூரை வீட்டிற்குக் கட்டுக் குச்சிகளாகப் பயன்படும். தட்டி முதலியனவும் செய்யப்படுகின்றன. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 40, 60 எனப் பீரிமெர் (1925, 1934) கணக்கிட்டுள்ளார்.