பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களும் மண்டிப் போர் இட்டன. அந்த நிலையில் ஒளவையார் ஆண்டு வந்தனர். மலையமான் திருமுடிக்காரி அதிகமானேடு போர்புரிதலைக் கண்ணுற்றனர். வீணே திருமுடிக்காரி அஞ்சியுடன் எதிர்த்துப் போராடித் தோற்றுப் பல உயிர்கள் அழிதற்குக் காரணமாக இருக்கின்றனனே என்று இரக்கங்கொண்டவராய், திருமுடிக்காரியையும், அவன் படை வீரர்களையும் பார்த்து, வீரர்காள் அதிகமான் எளியவன் என்று எண்ணாதீர். அவன் வாட்கள் பகைவரது யாக்கையில் படிந்து கதுவாய்போய் வடிவிழந்துள்ளன. அவனது அயில்வேல்கள் குறும்பரது அரண்களை வென்று நாட்டை அழித்து ஆணியும் காம்பும் தளர்ந்து உள்ளன. ஆனைகள் எதிரிகளின் அரண்களை அழித்துத் தம் தந்தங்களில் கட்டிய பூண்களை நிலை தளரச் செய்து நிற்கின்றன. அவனது அசுவங்கள் வைரிகளின் மார்பகத்தில் ஓடி உலவிக் குருதிபட்ட குளம்பினை யுடையன வாகவுள்ளன. அதிகமானால் கோபிக்கப்பட்டவர் உயிர் பிழைத்தல் அரிது. உங்களது நீர்வளனும் நிலவளனும் அமைந்த ஊர்கள் உங்கட்கே உரிமை யுடையனவாக இருக்க விரும்பினாலும், உங்கள் மனைவிமாரை விட்டுப் பிரியாது உடன் வாழ அவாவினீராயினும், அவனுக்குத் திறை கொடுத்துச் சந்து செய்து கொள்ளுதலே சாலவும் அறிவுடைமையாகும். நான் உள்ளதை உள்ளவாறே கூறினேன். யான் சொன்னவற்றை நன்கு சிந்தித்தபிறகு நீங்கள் போரில் இறங்குங்கள்,” என்று கூறி அறி