பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறி. என்றாலும் திருமுடிகாரி முன்வைத்த காலைப் பின்வைக்கும் இயல்பினன் அல்லன். ஆதலின், எதிர்த்தே போரிட்டான். அப்போரில் அதிகமானே வெல்ல மலையமானே தோற்று ஓட நேர்ந்தது. திருக்கோவலூர் அதிகமான் ஆட்சிக்குள்ளாக்கப்பட்டது. இத்தகைய வீராதி வீரனாக அதிகமான் விளங்கினான். இவன் தகடூர் எரிந்து வெற்றிகொண்ட சிறப்பைப் பரணர் சிறப்பித்துப் பாடியுள்ளார் என ஔவைப் பிராட்டியாரே குறிப்பிடுவராயின், இவனது வெற்றிச் சிறப்பினை என்னென விளக்குவது! அதிகமான் மிகுந்த வீரன் என்பது மற்றொரு செயலாலும் நமக்குப் புலனாகிறது. அதிகமான் தகடூரை வென்றான். வென்று மீளுகையில் தனக்கு நீண்ட நாள் மகப்பேறின்றி யிருந்து ஓர் ஆண் மகன் பிறந்தனன் என்பதைக் கேள்வியுற்றதும், போர்க்கோலம் பூண்டிருந்த நிலையிலேயே அக்கோலத்தைக் களையாமல் கையில் உள்ள வேலுடனும், காலில் கட்டிய கழலுடனும், உடம்பில் இருந்த வியர்வையுடனும், பகைவரைச் சினந்து நோக்கிய நோக்குடனும் சென்று கண்ட காலத்திலும், அச்சினத் தீ எழுந்தவண்ணம் இருந்தது என ஔவையார் கூறுவதால் அறியலாம். இத்தகைய சீற்றமறா தவனோடு சிலைப்பவர் பிழைத்துப் போதல் ஒண்ணுமோ? ஒண்ணாது.

ஔவையாரும் தொண்டைமானும்

அதிகமான் வீர உணர்ச்சியினன் என்றாலும், அறப்போர் புரியவே எண்ணும் இயல்பினன். இவனது போர் வன்மையை முற்றிலும் உணராத காஞ்சி