பக்கம்:புது மெருகு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புது மெருகு

பாசறைக்கு முன்னே அது சென்று வீழ்ந்தது. 'பறம்பு மலையில் இறைவனுக்கு ‘நிவேதனமான அன்னம்' என்ற குறிப்போடு உள்ள ஓலையொன்றும் அதில் இருந்தது.

படைத்தலைவன் அவற்றைப் பார்த்தான்; பிரமித்தான். நண்பர்களுகெல்லாம் காட்டினான். "இந்த அதிசயத்தை நம் அரசர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பாரிக்குப் பறம்புமலையும் கபிலருமே பலம் என்று இருந்தோம். இப்போது தெய்வமே அவன் பக்கமாக இருக்கிறது. வானவர்களே நெல்லை அனுப்புகிறார்கள் போலும்!" என்று உணர்ச்சி ததும்பக் கூறினான். வஞ்சிக்கும் உறையூருக்கும் மதுரைக்கும் ஆட்கள் ஓடினர். "அதிசயம், அதிசயம்" என்று சொல்லிப் படைத்தலைவர் திருமுகத்தைக் கொடுத்தனர். மூன்று வேந்தர்களும் உடனே புறப்பட்டுப் பறம்புமலை யடியில் வந்து சேர்ந்தனர்.

மூவரும் கூடினர்; படைத்தலைவர்களைக் கூட்டினர். " இந்தப் பறம்புமலை ஒரு தெய்வம்; இதை ஆளும் பாரி ஒரு தெய்வம்; அவனுக்கு வாய்த்த கபிலர் ஒரு பெரிய தெய்வம்" என்று அருண்டுபோய் அவர்கள் சொல்லி விடுதலை வேண்டினர்.

இதென்ன! மறுபடியும் ஓர் ஓலைச் சுருள் வந்து விழுந்தது. அதனோடு ஒரு நெற்கதிரும் துணையாக வந்தது. தம்முடைய கண்ணாலே நெற்கதிரைக் கண்டபோது அந்த முடி மன்னர்களின் அடி வயிறு பகீரென்றது.

கபிலர் பாடல் ஒன்று அனுப்பியிருந்தார். ஆனால் இந்தத் தடவை பாட்டு மிகவும் சுருக்கமாக இருந்தது. நாலே வரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/33&oldid=1548629" இலிருந்து மீள்விக்கப்பட்டது