பக்கம்:புது மெருகு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுஞ் சுவர்

58

நிலைக்கு வந்துவிட்டார். வந்தால் என்ன? அந்த நிலை யிலும் அவருக்கு இன்பம் இருந்தது; புதுமை இருந் தது; தம் வாழ்க்கையில் கிடைத்தற்கு அரிய செவ்வி அது என்ற உணர்ச்சியும் இருந்தது. ஆகவே தம் எண் ணத்தைச் செயலில் காட்ட முனைந்தார்.

கூலிக்கு வேலை செய்யும் சிறு கூட்டம் ஒன்றைக் கம்பர் பார்த்தார். "ஐயா, இந்த ஊரில் கூலிக்கு வேலை கிடைக்குமா?" என்று கேட்டார். அவர்கள் அவரை ஏற இறங்கப் பார்த்தார்கள்; கூலி வேலை செய்வதற் காகப் படைக்கப்பட்ட தேகமாகத் தோன்றவில்லை.

"ஏன் அப்பா, நீ எந்த ஊர்? திடீரென்று இங்கே வந்த இடத்தில் கூலி வேலை ஏன் செய்யவேண்டும்?" என்று கேட்டான் ஒருவன்.

அவன் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. "இந்த ஊரில் வேலை செய்து பிழைக்கலாம் என்று வந் திருக்கிறேன். நான் இந்த ஊருக்குப் புதிது. அதனால் தான் கேட்கிறேன்" என்றார்.

அந்த மனிதனுக்கு அவருடைய விடை திருப்தியை அளிக்கவில்லை. 'தம்பி யாரிடமோ கோபித்துக் கொண்டு வந்திருக்கிறான். பார்த்தால் ராஜா மாதிரி இருக்கிறான். இவனாவது, கூலி வேலை செய்வதாவது!" என்ற எண்ணமும் அவன் பார்வையும் கம்பரைச் சுற்றி வட்டமிட்டன.

"வேலை இருந்தால் சொல்லுங்கள்; இல்லையானால் பக்கத்து ஊருக்குப் போகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/90&oldid=1549354" இலிருந்து மீள்விக்கப்பட்டது