வைணவ புராணங்கள்/நூலாசிரியர் வரலாறு

விக்கிமூலம் இலிருந்து
பிறப்பு: 27-08-1916


இந்நூலாசிரியரைப்பற்றி . . .

87 அகவையை எட்டிய நிலையிலுள்ள இந்நூலாசிரியர் எம்.ஏ, பி.ஏ, பி.எஸ்.சி., எல்.டி வித்துவான், பிஎச்.டி, டி.லிட் பட்டங்கள் பெற்றவர்.

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் தலைமையாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் - துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் நிறுவனர் பேராசிரியர் - துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப்பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி-ஜூன் 1979) தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதிதிருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும் 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் ‘வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. (த.ப.க. வெளியீடு 1996-பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர்.சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள்வரை)வும் இருந்து வருபவர். ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாகவும் இருப்பவர்.

நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தில் நம்மாழ்வார்தத்துவத்தை ஆய்ந்து டாக்டர் (பிஎச்டி) பட்டம் பெற்றவர். அந்த ஆய்வுநூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாய் வெளிவந்துள்ளது.எம்.ஃபில், பிஎச்டி மாணாக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன. பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம், தத்துவம் (35), வாழ்க்கை வரலாறு, தன்-வரலாறு (13), திறனாய்வு (2), அறிவியல் (20), ஆராய்ச்சி(6) ஆக122 நூல்களை வெளியிட்டவர்.

இவர்தம் அறிவியல்நூல்களுள் மூன்றும், சமயநூல்களுள் நான்கும் தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப்பரிசினையும் ஆக9நூல்கள் பரிசுகள் பெற்றன.

இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக்கோன் என்ற விருதினையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு 'றுரீசடகோபன் பொன்னடி என்ற விருதினையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு திரு.வி.க. விருதினையும் (10,000 வெண்பொற்காசுகள்-1987), இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினையும் (1991), இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்.அறக்கட்டளை கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி இராஜா சர் முத்தையவேள்” விருதினையும் (50,000 வெண் பொற்காக்கள் - 1994, இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் விருதினையும் (1994-1000 வெண்பொற்காசுகள்), சென்னை ஆழ்வார்கள் ஆய்வுமையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் 'ஸ்ரீஇராமாநுஜர் விருதை'யும் (1996-25,000 வெண் பொற்காககளையும்) வழங்கிச்சிறப்பித்துள்ளன.

அண்மையில் இவர்தம் இயற்றமிழ்ப்பணியைப் பாராட்டித்தமிழ் இயல் இசைநாடகமன்றம் (அரசு) 'கலைமாமணி'’ என்ற விருதினையும் (19993 சவரன் தங்கப்பதக்கம்,இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டிச்சென்னை கோயம்பேடு மனிதநேய வைணவ இயக்கம் 'வைணவ இலக்கிய மாமணி’ என்ற விருதினையும், (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் டிலிட்” (கண்ணியம் என்ற பட்டத்தையும் (1999), காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை 'சேவாரத்னா’ விருதினையும்,(1000 வெண்பொற்காசுகள்1999)இவர்தம் வைணவப்பணியைப் பாராட்டி வழங்கிச்சிறப்பித்துள்ளன. இவர்தம் வாழ்நாள் தமிழ்ப் பணியைப் பாராட்டி 'தினத்தந்தி சி.பா. ஆதித்தனார் விருது’ (2001-ஓர் இலட்சம் வெண்பொற்காககள்) வழங்கிச் சிறப்பித்தது.

துறையூர் பக்கம் (திருச்சிமாவட்டம் இவர் ஆற்றிய கல்விப்பணியைப் 1941-50 பாராட்டி துறையூர் நகராண்மைக் கழகமும், துறையூர் தமிழ்ச் ங்கமும் (2001) இவரைப்பாராட்டி மகிழ்ந்தது.

இவர்தம் சைவசமய இலக்கியப்பணியைப்பாராட்டிதிருப்பெருந்திரு. சோமசுந்தரர் குருவருள் அருட்பணி மன்றம் (6 சந்தைப் பண்ணை, புது வண்ணாரப்பேட்டை சென்னை-81 தமது 11-வது திருமந்திர முற்றோதல் விழாவில் 'ஆய்வுத்தமிழரசு'’ என்றவிருதும், ரூ.3000/-மும் வழங்கிச்(2001) சிறப்பித்தது.

இவர்தம் தெய்வத்திருக்குறள் பணியைப்பாராட்டிகுருபழநி ஆதீனம் திருக்குறள் பீடம் (குருகுலம், மதுராந்தகம் - 603 306) 'பொதுமறைச் செம்மல்' என்ற விருதும், ரூ.2000மும் வழங்கிச் (2002) சிறப்பித்தது.

இவர்தம் பல்வேறுதுறைத் தமிழ்ப்பணியைப் பாராட்டி சேலம் தமிழ்ச் சங்கம் 'தமிழ் வாகைச் செம்மல்' விருதையும் ரூ. 10,000/-மும் வழங்கி (மார்ச்சு,2003) சிறப்பித்தது.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.