பக்கம்:அழகர் கோயில்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 135 ஆழ்வாருடைய வலத்திருச் செவியிலே உபதேசித்தருள திருமல் கைமன்னன், வந்தது இறைவனே என அறிந்து கொண்டதாலவே குருபரம்பரை நூல் குறிப்பிடுகின்றது. அழகர்கோயிலில் 'வேடுபறி'த் திருவிழா நிகழ்ச்சியில் இம் மாற்றம் ஏற்பட்ட காரணம் தெளிவாகவே புரிகிறது. உண்மையிலேயே கோயில் நகைகளைக் கொள்ளையிட்ட வேடர்களைப் பிடித்த ஜமீன் தாருக்கும், ஒரு காலந்தில் உண்மையிலேயே அழகர் ஊர்வலத்தை வழிமறித்துக் கொள்ளையிட முயன்று, பின் அடியாரான நாட்டுக் கள்ளர்க்கும் கோயில் திருவாகம் சமயத்தின் பேரால் காட்டிய மரியாதையாகும் இது.அது மட்டுமன்றிக் கள்ளர்களின் நொல்வையை என்றென்றைக்கும் தடுக்கவேண்டி, அவர்களைச் சமய எல்லைக் குள் இழுத்துவந்து, இக்கோயிலின் மீது ஓர் உணர்வு நிறைந்த ஈடுபாட்டினை உண்டாக்கி, கோயிலின் சொத்துக்கருக்குப் பாது காப்புத் தேடியுள்ளனர் என நினைக்கத் தோன்றுகிறது. 6.6. உணவு : நாள்தோறும் வழக்கமாக இறைவனுக்குப் படைக்கப்பெறும் உணவு வகைகளே திருவிழாக் காலங்களிலும் இறைவனுக்குப் படைக்கப்பெறுகின்றன. உண்வையே முதன்மையாகக்கொண்ட ஒரு விழாவும் கோயிலில் நடைபெறுகிறது. இத்தலத்திறைவனை மணவாளனாக வரித்த ஆண்டாள் தம் நாச்சியார் திருமொழியில், நாறுநறும் பொழில்சூல் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான் நூறுதடா வில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறுதடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங் கொலோ' என நேர்ந்துகொள்கிறார். ஆண்டாளின் காலத்திற்குப் பின்வந்த இராமானுசர் இத்தலத்தில் ஆண்டாளின் பாசுரப்படி இறைவனுக்கு நூறுதடா வெண்ணெயும் நூறுதடா அக்காரவடிசிலும் (சருக்கரைப் பொங்கல்) படைத்துப் பின் திருவில்லிபுத்தூர் சென்றார். அப்போது தனக்கு அண்ணனாக நின்று திருமாலிருஞ்சோலை நம்பிக்குத் தான் வாய்நேர்ந்ததை இராமானுசர் படைத்த காரணத்தால், ஆண்டாள் அவருக்குக் 'கோயிலண்ணர்’ என்ற திருநாமம் கொடுத்ததர்க ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம் கூறுகிறது.10 இக்கோயிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/142&oldid=1468009" இலிருந்து மீள்விக்கப்பட்டது