பக்கம்:அழகர் கோயில்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 அழகர்கோயில் இறைவனுக்கு இன்றும் மார்கழி மாதம் இருபத்துயேழாம் நான் நூறு கிண்ணங்களில் அக்காரவடிசிலை உணவாகப் படைக்கின்றனர். சித்திரைத் திருவிழாவிற்கு மதுரைக்குப் புறப்படும் இறைவன் கோயிலுக்கு வெளியில் வண்டிவாசலுக்கருகிலுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு பயணத் தைக் தொடங்குகிறார். காட்டுவழி தாண்டிப் பயணம் செல்லுமுன் கொள்ளும் இவ்வுணவினைக் 'காட்டுத்தளிகை' என்று வழங்கு கின்றனர், ஆவணி மாதத்தில், முப்பழத் திருமஞ்சனம்' எனப்பெறும் திருவிழாவில் மா, பலா, வாழை, ஆகிய மூன்று பழங்களையும் இறைவனுக்குப் படைப்பதே திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தேரோட்டத்தின் போது, தெற்கு வீதியில் தேர் திரும்பும்போது காணப்பருப்பினால் (கொள்ளுப்பருப்பு) ஆக்கிய சோறும், காத்தொட் டிக்காய் வற்றலும் படைக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந் திருக்கிறது.19 6.7. உடை: பொதுவாக எல்லாக் காலங்களிலும் இறைவனுக்கு அணிவிக் கப்பெறுகின்ற பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய அரையாடையே திரு விழாக் காலங்களிலும் இறைவனுக்கு அணிவிக்கப்பெறுகிறது. சித்திரைத் திருவிழாவில் கள்ளர் திருக்கோலம் பூணும்போது மட்டும் அக்காலத்திய நாட்டுக்கள்ளர்களைப் போல இறைவனுக்கு உடை அணிவிக்கப்பெறுகிறது. ஒரு கருப்பு நிறப் புடைவையினைக் (இதனைக் 'காங்கு' என வழங்குகின்றனர். கணுக்கால் தொடங்கி இடுப்புவரையிலான அரையாடையாகச் சுற்றி அதையே இரண்டு மார்பிலும் குறுக்காகச் சுற்றி முழங்கை வரையிலும் முழுக்கைச் பம்கூட போலவும் சுற்றி ஆடையாக அணிவிக்கின்றனர். தலையில் உருமால் அணிவித்துள்ளனர். உருமாலுக்குமேலே தங்கத்தாலான நெற்றிப்பட்டமும் அணிவிக்கின்றனர். அழகர் ஆற்றிலிறங்கிய அன்று இரவு வண்டியூர் வீரராகவப்" பெருமாள் கோயிலில் தங்குகிறார். அங்கு அழகரின் திருமேனியின் மீது மெல்லிய மல் துணியினைச் சுற்றி, முகம் தவிரப் பிற இடங் களையெல்லாம் சந்தனத்தைப் பூசி, அதன் மீது வைர நகைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/143&oldid=1468010" இலிருந்து மீள்விக்கப்பட்டது