பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

290 ஆழ்வார்கள் காலநிலை ஆட்சிமுறை முற்றும் மாறவும், அதனால் நம்மவுரெல் லாம் விடுதலை பெற்று நித்தியானந்த வாழ்வான சதந் திரத்தை இம்மையிலே அடைந்துய்யவும் தடையில்லை என்பது, நம்மாழ்வாரின் அற்புத உபதேசம். இங்கு அவரருளிய முடிவான பொன்மொழி-- "ஒக்கத் தொழு கிற்றீராகில் ஒன்றுங் கலியுக மில்லையே" என்பது. முடிவுரை இவ்வாறே இம்மையும் மறுமையும் பற்றிய உப தேசப் பொன் மொழிகளை இவர் திருவாக்கில் நெடுகக் காணலாகும், வேதாந்த முடிவுகளான அரிய பெரிய தத்துவங்கள் இவரருளிச் செயல்களில் ,மலிந்து திகழ் கின்றன. இவை யாவும் முன்னோர் அருளிய ஈடு முதலிய பேருரைகளால் அறியத் தக்கவை, இங்ஙனம் தென்னாடு உய்ய அவதரித்த பெரியாரைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வைஷ்ணவ உலகம் போற்றுவது அதன் பெரும் பேறேயன்றோ ? அந்தணர்க் கோநல் லருந்தவர்க் கோஅன்றி யோகியராய் வந்தவர்க் கோமத வாதியர்க் கோமக ரக் குழைசேர் சுந்தரத் தோளனுக்கோ அவன் தொண்டர்கட் கோ சுடர்தோய் சந்தணச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே-- கம்பர் அந்நிய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக் கேடுகளை நீக்க வேண்டி காந்தியடிகள் கையாண்ட முறைகளையும் உபதேசங்களையும் மேற்கூறிய ஆழ்வார் முறை யுப தேசங்களோடு ஒப்பிட்டு உணரத்தகும்.