பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினோராம் அத்தியாயம் 11. அருளிச்செயற் பாடவமைதி மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிய திவ்யப்ரபந்தங்களுக்குப் பூர்வாசாரியர்கள் எழுதியுள்ள வியாக்யானங்கள் அருமை பெருமை வாய்ந் தவை, அப்பேருரைகள் இல்லையேல் தமிழ்வேதம் என்று போற்றப்படும் அருளிச்செயல்களின் உண்மைப் பொருள்களை நம்மனோர் உணர்ந்துகொள்ள இடமே இல்லை, அவற்றை நன்கறிந்து போற்றுவதால், திவ்யப்ர பந்தங்களை யாவரும் சுத்தமாகவே ஓதியுய்யலாகும். அவ்வாறு அறிந்தோதாக் குறையால், பிறழ்ந்த பாடங்கள் பலவிடங்களில் அமைய நேர்ந்தன. இவற்றை யெல்லாம், செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவின ரான ஸ்ரீ. உப. வே, அண்ணங்கராசாரிய ஸ்வாமியும் பிறரும் உரை நூல்களிலும் பத்திரிகைகளிலும் விளக்கி வருகிறார்கள், பழமையான நூல்களிலே பாடாந்தரங்கள் அமை தல் எம் மொழியிலும் உண்டு. பின்வந்த உரையாசிரி யர்கள் அவற்றுள் ஏற்புடையவற்றைக் கொண்டு ஏலாத 'வற்றை விலக்கியுள்ளதை அறிஞர்கள் நன்கறிவர், அம்முறையில் அருளிச் செயல் வியாக்யாதாக்கள் காலத்திலும் பாடாந்தரங்களாக வழங்கியவை பலவுள உ.தாரணமாக: செந்தமிழ் தொகுதி 46-ல் வெளியீடு.