பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாளர்களோடுள்ள எங்களது தொடர்புகள் மேன்மேலும் வலுப்பட்டு வரவேண்டும் என்றும் நாங்கள் உளமாரவே! விரும்புகிறோம். இது பற்றி எனது அமெரிக்க, ஆங்கிலேய, மேற்கு ஜெர் மானிய, ஜப்பானியச் சகாக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி யடைவேன். இந்த எழுத்தாளர்களையே நான் முதலாவதாகக் குறிப்பிடு கிறேன்; ஏனெனில் இவர்களது நாடுகளோடுதான் எங்களது யுத்தப் பிற்காலக் கலாசார உறவுகள் அவ்வளவு விரும்பத் தக்கதாக இல்லை. 6*னது கடிதத்தில் நான் எழுப்ப விரும்பிய முதல் விஷயம் இதுதான். இரண்டாவது விஷயத்தைப் பொறுத்தவரையில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள உங்களது சஞ்சிகையின் வருங்கால நடவடிக்கை சம்பந்தமாக சில யோசனை களைத் தெரிவிக்க விரும்புகிறேன். 'நான்' புரிந்து கொண்ட வரையில், உங் கள து சஞ்சிகை உண்மையான திறமையின் முத்திரையைத் தாங்கிய எல்லா வற்றையும், மனிதனுக்குத் தகுதியான ஒரு வாழ்க்கையை லாழி, மக்களுக்கு உதவும் அனைத்தையும் வெளியிட்டு வர முன் வந்துள்ளது. நவீன இலக்கியத்தின் நலன்களை இதயத்தில் கொண்டுள்ள மக்கள், தமக்குள் ஒருவருக்கொரு வர் கருத்தைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு மேடையாக உங்கள் சஞ்சிகை மாறு மானால் நான் மகிழ்ச்சியடைவேன்; என்னைப் போலவே நீ.லரும் அவ்வாறு உணர்வார்கள் என்றும் நான் நிச்சயமாகக் கூறுவேன். சோவியத் வாசகர்களுக்கும் (எழுத்தாளர்களும் கூடத்தான்}, நீங்கள் வெளியிடும் நாவல்கள் மற்றும் கதைகளின் ஆசிரியர் களுக்கும் இடையே கடிதங்களின் பரிவர்த்தனை ஒன்றுக்கு, உங்கள் சஞ்சிகை ஏற்பாடு செய்யுமானால் நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்களாக இருப்போம். இந்தப் படைப்புக்களைப் படித்து, அவற்றின் மூலம் பல்வேறு தேசங்களின் போராட்டங்களையும் நம்பிக்கைகளையும், அவற்றின் அந்தரங்க உலகத்தையும் பற்றித் தெரிந்து கொண்ட பின் னால், சோவியத் எழுத்தாளர்கள் அயல் நாட்டு எழுத்தாளர் களின் பால் அக்கறை காட்டும் சிந்தனைகளைப் பெறுவது சாத்திய

மாகும். உலகில் , எந்தவொரு எழுத்தாளரும் தமது - வாசகர்

284