பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் அபிப்பிராயத்தை அலட்சியப்படுத்துவதில்லை. டான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற நாவலைப் பற்றி அயல் நாட்டு வாசகர்கள்----அமெரிக்கர்களும் கூடத்தான்---கூறியிருந்த யாவற் றையும் படிப்பதில் நான் எவ்வளவு ஆர்வம் காட்டினேன் என்பது என் நினைவுக்கு வருகிறது. அந்த அபிப்பிராயங்கள் முரண்பட்டதாக இருந்தன; அவற்றில் எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொண்டு விடவும் இல்லை; இருந்தாலும் கூட, அவை மிகவும் போதனை தருவனவாக இருந்தன. நான் யோசனை தெரிவித்துள்ளதைப் போன்ற கடிதப் போக்குவரத்தானது, நமது பரஸ்பரக் கலாசாரச் செழுமையை யும் நல்லிணக்கத்தையும் மேலும் வளர்க்கும் என்று நான் கருதுகிறேன். நல்லெண்ணமும் பரஸ்பர மதிப்பும் இருந்தால்--முயற்சியும் பரஸ்பர முயற்சியாக இருந்தால்--கலாசார உறவுகளின் அபிவிருத்தியை, மேலும் பரந்த அளவில் தொடங்க முடியும் என்று கூறுவதற்கான தருணம் வந்து விட்டது என்ற உணர் வோடுதான் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன், இயல்பாகவே நான் இந்த விஷயங்கள் அனைத்தையும் மிகவும் பொதுவான முறையிலேயே எழுப்புகிறேன்; ஏனெனில் பிரதான மான விஷயம், கோட்பாட்டளவில் உடன்பாடு வேண்டும் என்றே நான் கருதுகிறேன்; அவ்வாறு இருந்தால் மற்றவை தானாகவே நிறைவேறும். இது விஷயமாக எனது அயல்நாட்டுச் சகாக்களின் அபிப் பிராயத்தைத் தெரிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைவேன், நாம் ஒரு பொதுவான மொழியைக் கண்டறிவோம்; இது விஷயத்தில் எனக்குத் திடமான நம்பிக்கை உண்டு. 1955 புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு பிறக்கவிருக்கும் தருணத்தில், நமது கலையின் நோக்கத்தையும் குறிக்கோள்களையும் பற்றிய ப ைழ ய உண்மைகளையெல்லாம் திரும்பவும் கூற வேண்டும் என்ற விருப்ப உணர்வை ஒருவர் பெறுவதில்லை. அது ஒரு புத்தாண்டு விருந்துக்கு மிகவும் ஊசிப்போன உணவாகவே அமைந்து வரும்! நாம் அனைவரும், அவரவர்தம் சொந்தக் கலைத் துறையில் ஒவ்வொருவரும், போதுமான அளவுக்கு விஷயம் தெரிந்தவர்கள் தான் என்றே நான் கருதுகிறேன். எனவே, நமது நாடு நம்மிட

மிருந்து என்ன எதிர்பார்க்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும்

285